பக்கங்கள்

வெள்ளி, 22 ஜூன், 2007

அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்

அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். புனிதம் என்று புனையப்பட்டு சடங்குகளாக இறுகிப் போய்விட்ட பொதுப்புத்தியை தானே வளர்த்துக்கொண்ட தன் தனித்தன்மையாலும், அனுபவத்தாலும் மீறுபவர்களை நம் குமுகாயம் என்றுமே மதிப்பதில்லை. இந்திய குமுகாயத்தின் பொதுப்புத்தியில் எளிமை, சிக்கனம், பிரம்மச்சரியம், ஆன்மீக நாட்டம் போன்ற சில விசயங்கள் புனிதங்களாகக் கட்டமைக்கப்பட்டவை.

எனவே இவைகளைக் கைக்கொள்வதாக நம்பப்படும் கலாமும், ரஜினியும் பிரபலமாகயிருப்பதில் வியப்பேதுமில்லை. பொதுவாக நம் குமுகாயம் இன்னமும் வளர் இளம்பருவ (Adolescent mentality) நிலையைத் தாண்டி சிந்திப்பதேயில்லை.

கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். அவர் அறிவியலில் எந்த கருதுகோளையும் (Hypothesis) முன்வைக்ககவில்லை; எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருப்பதையே போலச் செய்தார். ஆனால் அவரை ஏதோ இந்திய அறிவியல் வரலாற்றில் வராதுவந்த மாமணியைப் போல் நம் ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அதற்கு அவரது தனிப்பட்ட குணநலன்களும், அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம். ஆனால் உண்மையான அறிவியலாளரான பேரண்டவியலாளர் (Cosmologist) ஜெயந்த் நார்லிகர் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?

கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantacy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை (காட்டாக - நதி நீரிணைப்பு).


இதே கருத்துக்கள் ரஜினிக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் கலாம், ரஜினியோடு ஒப்பிடும்போது, சமீபத்தில்தான் புகழடைந்ததால் அவர் மீது ரஜினி அளவிற்கு எதிர்மறை விமரிசனங்களில்லை. அறிவுமுதிர்ச்சியடையாத, சரியாகச் சொன்னால், அரசியல், அறிவியல், கலை போன்ற சகல துறைகளிலும் விழிப்புணர்ச்சியற்ற ஊடகங்களும், பெருவாரியான மக்களும் கொண்ட நம் குமுகாயத்தில் இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.

19 கருத்துகள்:

  1. எனக்கு ஒன்று புரியவில்லை. இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். கலாம் எளிமையாக, சிக்கனமாக,பிரம்மச்சார்யனாக இருப்பது அவரது கொள்கையாக இருக்கலாம்.

    //கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். //

    சரி. என்னவாக இருந்தால்தான் அவரை ஒத்துக் கொள்ளுவீர்கள். தொழிற்நுட்பவியலாளரை ஒத்துக் கொள்ள மறுக்கும் நீங்கள் அறிவியலாளரை மட்டும் ஒத்துக் கொள்வீர்களா? அப்போதும் வேறு ஏதாவது ஒரு காரணம் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லுவீர்கள்.

    //அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம்//

    சரி. ஆனால் அவர் தனது சுயநலத்திற்காக ஏதேனும் கட்சியையோ, அல்லது வேறு எவற்றையோ ஆதரித்தாரா?இல்லையே. மற்றவர்கள் செய்வதற்கு இவர் மீது ஏன் பாய்கிறீர்கள்.

    //கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantacy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை//

    யாருங்க சொன்னது? இந்த தலைமுறையினர் என்ன சொன்னாலும் திருந்த மாட்டங்க. என்ன பண்ணாலும் ஏதாவது குறையைத்தான் கண்டுபிடிக்க முயல்வார்களே ஒழிய தான் கூறுவதில் நல்ல விஷயங்களை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று முன்பே தெரிந்தோ என்னமோ, அடுத்த தலைமுறையை சிறந்த தலைமுறையாக, ஓரளவு நற்பண்புகள் கொண்ட தலைமுறையாக, நல்லதோர் சமூக மாற்றத்திற்கு வித்திட முனையும் தலைமுறையாக வளர்க்க வேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தி வந்துள்ளார். அதற்காக பல காரியங்களையும் செய்து வந்துள்ளார்.

    அவரது நதி நீர் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவே இருக்கட்டும். அவரது நோக்கம் என்ன. ஒட்டு மொத்த இந்தியாவிலும் தண்ணீர்ப் பஞ்சம் என்ற ஒன்று இருக்கக் கூடாது எனும் உயர்ந்த நோக்கம்தானே? இல்லை எல்லா நதிகளும் ராமேசுவரத்திலுள்ள எனது வீட்டின் பின்புறம் வந்து கலந்து விட வேண்டும் என்று ஆசைப் பட்டாரா? இல்லை இத்திட்டம் முற்றிலும் சாத்தியமேயில்லாத திட்டம், இவர் தெரிந்தே மக்களை திசை திருப்புகிறார் என்று நீங்கள் வாதிடுவீரேயானால், மன்னியுங்கள் பாதி விஞ்ஞானிகள் சாத்தியம் என்றும் பாதிப் பேர் இல்லை என்றும் சொல்லுவதால் இது தீவிரமாக விவாதப் படுத்தப் பட வேண்டிய திட்டம். இத்தகைய ஒரு திட்டத்தை முன் மொழிந்ததாலேயே அவர் தவறானவர் என்று சொல்வதை என்னால் ஏறுக்கொள்ள முடிய வில்லை. இது சாத்தியமா?இல்லையா என்பதை என்னைவிட, உங்களை விட இத்துறை சார்ந்த வல்லுனர்கள் முடிவு செய்யட்டும்.

    //இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது. //

    எனக்குக் கூடதான் கவலையளிக்கிறது. ஒரு மனிதர் எப்படி இருந்தாலும் அவர்மீது குறைசொல்ல சிலர் இருக்கிறார்களே. இன்னும் யார் வந்தால்தான் இவர்கள் ஒத்துக் கொள்ளுவார்கள் என்று கவலை எழுகிறது.

    நான் கலாமை மகாத்மாவாக பார்க்க வில்லை. நல்லது செய்ய நினக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே பார்க்கிறேன். எனவே அவர் முயற்சிகள் ஏதேனும் தோல்வியடைந்தால், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. பலர் மகாத்மாவாக பார்ப்பதால் சிறு தவறுகள் கூட அவர் செய்து விடக் கூடது என்று நினைக்கின்றனர்.

    /அறிவியலாளரான பேரண்டவியலாளர் (Cosmologist) ஜெயந்த் நார்லிகர் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்//

    சத்தீயமாக எனக்குத் தெரியாது. அவர் போற்றப்படவேண்டியவராக இருந்தால் தயவுசெய்து ஒரு பதிவு போடுங்கள். கண்டிப்பாய் தெரிந்து கொள்ள முயலுகிறேன்.

    பி.கு: இதை ஒரு அனானியாக வந்து சொல்லிவிட்டுப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. இது எனது மாற்றுக் கருத்து அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  2. //////////////////////////
    இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.
    //////////////////////////

    சரியாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஒப்பீடு. மிக சுருக்கமாக ஆயினும் நறுக்கு தெறித்தாற்போல சொல்லியிருக்கிறீர்கள்.

    //அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல்.//

    இந்த வரிகளை நிரம்பவே ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. //அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல்//

    இந்த வரிகளை நானும் ரசித்தேன். கலாமுக்கும் இதற்கும் தொடர்பு படுத்துவதற்கு முன்பு, இந்த வரியமைப்பையும், அது சொல்லும் கருத்தையும் நான் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. // முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். //

    இதெல்லாஞ்சரி! உன்னோட ப்ரோபல்ல ஒரு பிகரு படம் போட்டிருக்கயே, அதுதான் நீயா? உன் படம் போட்டா நல்லா இருக்காதுன்னும் ஒரு அழகான பொண்ணு படம் போட்டா ஒரு இமேஜ் இருக்குன்னும் தானோ?

    இது எந்த மாதிரியான பொதுப்புத்தி? :)))

    பதிலளிநீக்கு
  6. அரவிந்தன் நீலகண்டனை நண்பரா கொண்ட நீ எப்படி நடுநிலையாக பதிவு எழுதுவாய்? அவனைப் போலவே நீயும் ஒரு பார்ப்பன அடிவருடிதான் என்று முடிவு கட்ட எங்களுக்கு நீண்ட நேரம் ஆகாது!

    புளியமரம், பேரப் பாரு...

    பதிலளிநீக்கு
  7. இது என்ன கேவலமான சிந்தனை? இந்தியர்கள் அனைவரும் positive-ஆக நினைத்து, பெருமை கொள்ளும் கலாம் போன்றவர்களையே நீங்கள் இவ்வளவு negative-ஆக சித்தரித்து எழுதியிருப்பதைப் பார்த்தால், உங்கள் வாழ்க்கையின் தரத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்.
    இன்று நம் நாட்டில் நல்ல சிந்தனையாளர்களுக்கு கடும் பஞ்சம். நதி நீர் இணைப்பு ஏன் முடியாது என்கிறீர்கள்? சீனாவின் மஞ்சள் ஆற்று அணைத்திட்டம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பொறுப்பான தலைவர்களும், தொலைநோக்கு பார்வையுள்ள சிந்தனையாளர்களும், சிறந்த வல்லுனர்களும் சேர்ந்தால் முடியாதது என்ன?
    2 ரூ அரிசியையும், கலர் டீவியையும், டிஜிடல் பேனர் பற்ற மட்டுமே சிந்திப்பதை விடுத்து அடுத்த கட்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. //அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல்//

    இப்படி சொல்வதை விட பிரபலமானவர்களிடம் காணப்படும் எந்த குணத்தையும் அவரது ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள் என்று சொல்லலாம்.( பிரம்மச்சர்யம் vs காதல் மன்னன் பட்டம், கறுப்பாக இருப்பது vs சிகப்பாக இருப்பது, சிக்கனம் vs பிரம்மாண்டம்)

    //இந்திய குமுகாயத்தின் பொதுப்புத்தியில் எளிமை, சிக்கனம், பிரம்மச்சரியம், ஆன்மீக நாட்டம் போன்ற சில விசயங்கள் புனிதங்களாகக் கட்டமைக்கப்பட்டவை.

    எனவே இவைகளைக் கைக்கொள்வதாக நம்பப்படும் கலாமும், ரஜினியும் பிரபலமாகயிருப்பதில் வியப்பேதுமில்லை.//

    இவர்களின் வெற்றிக்கு இதுதான் காரணம் என்றால் அது தவறு.ப்ளேபாய் இமேஜ் நேருவின் வெற்றிக்கு ஒரு தடையாய் இருக்கவில்லை. கலாமின் பிரம்மச்சரியம் அவரை எந்த விதத்திலும் தூக்கி நிறுத்தவில்லை. காதல் மன்னன்களும் காதல் இளவரசன்களும் சிவகுமார் பிரசாந்தை தாண்டித்தான் புகழ் பெற்றனர்.

    //கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். அவர் அறிவியலில் எந்த கருதுகோளையும் (Hypothesis) முன்வைக்ககவில்லை; எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருப்பதையே போலச் செய்தார்//

    எதையும் புதிதாக கண்டுபிடிப்பது அமெரிக்கா பாணி அறிவியல்
    அந்த கண்டுபிடிப்பை தமக்கு தோதாக மாற்றுவது ஜப்பன் பாணி அறிவியல்
    ராக்கட்டையும் அணுகுண்டையும் கண்டுபிடித்தது மேற்கு. அதை இந்தியாவுக்கு கொண்டு வந்தது கலாமின் பாணி அறிவியல்.

    //ஆனால் அவரை ஏதோ இந்திய அறிவியல் வரலாற்றில் வராதுவந்த மாமணியைப் போல் நம் ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அதற்கு அவரது தனிப்பட்ட குணநலன்களும், அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம்.//

    தவறு. வெற்றியாளரின் தனிப்பட்ட குணாதிசியத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ரஜினியும் கலாமும் காதல் மன்னர்களாக இருந்திருந்தால் கூட யாரும் கவலைப்பட்டிருக்க போவதில்லை.

    //கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantasy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை (காட்டாக - நதி நீரிணைப்பு)//

    அணுகுண்டு மற்றும் கூட கலாமின் பல நாள் கனவுதான்.அது எத்தனை வருடம் கழித்து எத்தனை தடைகளை தாண்டி எத்தனை நெடிய போராட்டத்துக்கு பிறகு சாத்தியமானது என யோசித்து பாருங்கள்.

    Aim for the stars and maybe you'll reach the sky.

    If you aim for the lamppost, you may never get off the ground.

    //அறிவுமுதிர்ச்சியடையாத, சரியாகச் சொன்னால், அரசியல், அறிவியல், கலை போன்ற சகல துறைகளிலும் விழிப்புணர்ச்சியற்ற ஊடகங்களும், பெருவாரியான மக்களும் கொண்ட நம் குமுகாயத்தில் இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது//

    சரியா போச்சு.

    உலகின் மிகப்பெரும் புரட்சிகளும் சமூக மாற்றங்களும் இம்மாதிரி மக்கள் தலைவர்களிடமிருந்து தான் பிறந்திருக்கின்றன. படித்தவன் பதவிக்கு வருவது சமீபகாலமாகத்தான் நடந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. ஜெ கலாமை நிற்க வைப்பது - சீப் பப்ளிசிட்டி ஸ்டண்டு. கலாம் அதை ஏற்றார் என்றால் நம் மனதில் அவருக்கு இருந்த மதிப்பு சரியும்
    கருணாநிதி தமிழை எதிர்க்கிறார் என்று செக்கு வைக்கவும் காங்கிரஸ் - பாஜகவை அடிபணிய வைக்கவும் மூன்றாம் அணி செய்யும் இந்த காரியம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகா கேவலமான நிகழ்ச்சியாக நினைவில் கொள்ளப்படும்.
    பாஜக-காங்கிரஸ்-மூன்றாவது அணிக்கு ஜனாதிபதி தேர்வை அரசியலாக்கியதற்காக கடுமையான கண்டனங்கள்.

    பதிலளிநீக்கு
  10. திருத்தம்

    அணுகுண்டு மற்றும் ICBM (Inter continental ballistic missile) கூட கலாமின் பல நாள் கனவுதான்.அது எத்தனை வருடம் கழித்து எத்தனை தடைகளை தாண்டி எத்தனை நெடிய போராட்டத்துக்கு பிறகு சாத்தியமானது என யோசித்து பாருங்கள்.

    ICBM என்பது முந்தைய பின்னூட்டத்தில் விட்டுப்போனது

    பதிலளிநீக்கு
  11. //இது என்ன கேவலமான சிந்தனை? இந்தியர்கள் அனைவரும் positive-ஆக நினைத்து, பெருமை கொள்ளும் கலாம் போன்றவர்களையே நீங்கள் இவ்வளவு negative-ஆக சித்தரித்து எழுதியிருப்பதைப் பார்த்தால், உங்கள் வாழ்க்கையின் தரத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன். //

    முகத்தை காட்ட முடியாமல் முகமிலியாக ஒருவரின் வாழ்க்கத்தரத்தை நினைத்து பரிதாபப்படும் உன்னுடைய வாழ்க்கையை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.

    -இன்னொரு அனானி

    பதிலளிநீக்கு
  12. //உலகின் மிகப்பெரும் புரட்சிகளும் சமூக மாற்றங்களும் இம்மாதிரி மக்கள் தலைவர்களிடமிருந்து தான் பிறந்திருக்கின்றன.//

    கலாம் மக்கள் தலைவரா?

    சரியாப் போச்சு!

    பதிலளிநீக்கு
  13. நந்தா கையில ஒரு தேசியக்கொடியை கொடுங்கப்பா. அவரைப்பார்த்தா திருப்பூர் குமரன் மாதிரியிருக்கு :-)

    பதிலளிநீக்கு
  14. congrats for your guts for calling a spade a spade

    பதிலளிநீக்கு
  15. you can also read manikandan and nallamugamoodi's posts on the subject.

    பதிலளிநீக்கு
  16. now do you know why India cannot be developed?
    because of people like the author of this article..they cannot do any good deeds..cannot follow someone who tries something to improve..
    what this author is doing is just blaming...
    if you are finding fault in AJKalam..then there is noone in India you can follow...and noone to develop india..India will be doomed because of people like the author and his supporters..good for nothing and discouraging others...
    even in 2020200220 india will not be developed or disease/starvation free
    ungaluku muslims thaanda sari..you all deserved to be treated like pigs..just good for slaughtering

    பதிலளிநீக்கு
  17. இந்திய பாரத இளைய தறைமுறை பேரில் மேதகு கலாம்
    அவர்களுக்கு தனிப்பட்ட ஒரு அக்கறை இருந்தது என்பது
    இதுவரை இருந்த மற்ற குடியரசுத் தலைவர்களிடமிருந்து
    அவரை வேறுபடுத்திக் காட்டியது என்பது உண்மை.
    இது இந்த தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலை
    கொண்டு, எங்கு தொடங்கிச் செப்பனிடலாம் என்று அவர்
    சிந்தித்தின் விளைவு. ( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...)
    திரு. கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இல்லாது
    இருந்தாலும், தொடர்ந்து இந்தக் காரியத்தைச் செய்வார்
    என்கின்ற பலபேரின் நம்பிக்கை தான் அவரின் சிறப்பு,

    பதிலளிநீக்கு
  18. இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.

    "hi friend"
    i do feel sorry for you,these people words are accepted by people because people love them and they just want to hear these men speak!as these mens doesn't speaks more ...people believe if these men says something that is good or possible !

    rajini veriyan

    பதிலளிநீக்கு