பக்கங்கள்

வியாழன், 7 ஜூன், 2007

தென்பாண்டிச் சீமையிலே...

எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாயகன் படத்தில் இடம்பெறும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. கடந்த 20 வருடங்களாக, இசை ஞான சூனியமான, என்னைக் கட்டிப்போடும் பாடல் இது என்றால் அது மிகையல்ல. இப்போது என் மகன் பிறந்தபின் இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்த பாடலாகிவிட்டது. ஏழு மாதமாகும் என் மகனை தாலாட்டி தூங்கவைக்க முயற்சிக்க நான் பாடும் பாடல் இதுதான்.


இன்று ஓசை தளத்திலிருந்து இப்பாடலை எனது கணினிக்கு இறக்கிக் கேட்டுக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன். இப்பாடலின் எல்லா அம்சங்களுமே (வரிகள், இசை, குரல், படத்தோடு இயல்பாகப் பொருந்துவது) அத்துணை சிறப்பாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானல் கமலின் குரல். மூன்று முறை மூன்று விதமான முறைகளில் இப்பாடல் வருகிறது. முதலில் இளையராசாவின் கிராமத்து தாலாட்டு வடிவத்தில் பின்னணி இசையில்லாமல்; பின்னர் கமலின் குரலில் இரண்டுமுறை, பின்னணி இசையுடன். கமலின் குரலிலுள்ள அந்த ஏற்ற இறக்கங்கள் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்புத் தட்டாது. கமலுக்குப் பின்னும் சாகா வரம் பெற்ற பாடலாக தென்பாண்டிச் சீமையிலே திகழும் என்பது நிச்சயம். இது குறித்து முன்பு நான் ‘ராயல்’ ராமின் பதிவில் இட்ட பின்னூட்டம்.

5 கருத்துகள்:

  1. //என் மகனை தாலாட்டி தூங்கவைக்க முயற்சிக்க நான் பாடும் பாடல் //
    பையன் ரொம்ப அழுதுகிட்டே இருக்கான்னு உங்க மனைவி ஏன் சொன்னாங்கன்னு இப்பத் தான் தெரியுது ;)

    //‘ராயல்’ ராமின் //
    நீங்களுமா? வாழ்க ராயல்..

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு தோழரே.

    பொதுவாக உங்கள் பதிவு என்றாலே படிப்பதற்கு பல மணி நேரம் ஆகும் என்ற வதந்தி தமிழ்மணத்தில் உலாவுகிறது. இப்பதிவின் மூலமாக அந்த வதந்தியை தூள் தூள் ஆக்கிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு தலைவா... :))

    /முன்பு நான் ‘ராயல்’ ராமின் பதிவில் இட்ட பின்னூட்டம்.//

    தெய்வமே நீங்களுமா???

    பதிலளிநீக்கு
  4. தல,
    எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.

    http://theyn.blogspot.com/2007/06/7-9.html

    பதிலளிநீக்கு