முன்பொருமுறை, எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் மூத்த மருத்துவர் ஒருவருடன் நான் சாப்பிடும் ஹோட்டல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் அடிக்கடி ஹோட்டல்களை மாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அலுவலகம் ராயப்பேட்டையிலிருப்பதால் மதிய வேளைகளில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன். சில சமயங்களில் கீரீம்ஸ் ரோடு மற்றும் எழும்பூரிலுள்ள உலக பல்கலைக்கழக உணவகம் வரை சென்று கூட சாப்பிட்டதுண்டு. (அதெல்லாம் ஒரு பொற்காலம்!? - என்ன மழைக்காலங்களில் சற்று சிரமம்.) தொடர்ந்தாற்போல் மிக நீண்டகாலம் சாப்பிட்ட ஹோட்டல் ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சரவணபவன். அங்கு விரும்பிச் சாப்பிடுவது மினி மீல்ஸ் - அதில் பரிமாறப்படும் சர்க்கரைப் பொங்கலுக்காகவே அதை விரும்பிச் சாப்பிடுவதுண்டு.
மேற்குறிப்பிட்ட அந்த மருத்துவருடன் நான் ஏன் அடிக்கடி சாப்பிடுவதற்கு ஹோட்டல்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன் என விளக்கிக் கொண்டிருந்தபோது, (நான் அவருக்குக் குறிப்பிட்ட காரணங்களை பிறகு தனிப்பதிவாகப் போடுகிறேன் மகா ஜனங்களே!) அவர் கிண்டலாகச் சொன்னார், ‘தங்கவேலிற்கு பெண் பெயர் சூட்டியுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதுதான் மிகப் பிடிக்கும்’ என்று. ஏனெனில், நான் சாப்பிட்ட பெரும்பாலான ஹோட்டல் பெயர்கள் - சங்கீதா, கற்பகம், வசந்த பவன், ரத்னா கபே, ராஜேஸ்வரி பவன், அன்னபூர்ணா, அபிராமி, கல்பகா எனப் பெண்பாற் பெயர்களாகவேயிருந்தன; சரவண பவன் ஒரு விதிவிலக்கு. அவர் அவ்வாறு குறிப்பிட்டது எனக்கு ஒரு சிந்தனையத் தோற்றுவித்தது; பெரும்பாலான சைவ உணவகங்களின் பெயர்கள் ஏன் பெண்பாற் பெயர்களாகவும், அசைவ உணவகங்கள் ஆண்பாற் பெயர்களிலும் உள்ளன என்று.
சில உதாரணங்கள்; சைவ உணவகங்களின் பெயர்கள் மேற்குறிப்பிட்டவை தவிர, சுப்புலட்சுமி பவன், அலங்கார், அபூர்வா, பார்வதி பவன், வசந்தம், வசந்த விஹார், சந்திர விலாஸ், மீனாட்சி பவன், ஹோட்டல் மனோரமா, அம்பிகா எனப் பெண்பாற் பெயர்களாகவே உள்ளன. சரவண பவன், பாலாஜி பவன், ராஜ் பவன், அசோக் பவன் போன்றவை சில விதிவிலக்குகள். அதே சமயம் அசைவ உணவகங்கள் பெரும்பாலானவை ஆண்பாற் பெயர்களிலேயே உள்ளன. உ.தா. - பொன்னுச்சாமி ஹோட்டல், முனியாண்டி விலாஸ், அய்யனார், புஹாரி என்பன. விதிவிலக்காக அம்மா ரெஸ்ட்டாரெண்ட் போன்றவை. அதே சமயம் பால் வேறுபாடற்ற சைவ, அசைவ உணவகங்களும் சில உள்ளன; உ.தா. - உட்லேண்ட்ஸ், காளியாக்குடி, ஹாட் சிப்ஸ், காரைக்குடி, விருதுநகர் போன்றவை.
இப்பெயர்களை ஆராய்ந்ததில் எனக்கொரு விசயம் புலப்பட்டது. நம் சமூகத்தில் சைவ உணவு உண்பவர்கள் உயர்வாகவும், அசைவம் உண்பவர்கள் கீழாகவும் கருதும் வழக்கம் இருக்கிறது. மேலும் சைவம் மென்மையின், அதனால் பெண்மையின் குறியீடாகவும், அசைவம் வலிமையின், அதனால் ஆண்மையின் குறியீடாகவும் கருதப்படுகிறது. அதனால்தானோ என்னவோ சைவ உணவகங்கள் பெண்பாற் பெயரிலும், அசைவ உணவகங்கள் ஆண்பாற் பெயரிலும் உள்ளன. மற்றொரு முக்கியமான விசயம், பெரும்பாலான பெரிய சைவ உணவகங்கள், சரவண பவன் அண்ணாச்சி போன்றவர்கள் விதிவிலக்கு, உடுப்பி பிராமணர்களாலோ அல்லது திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி வட்டாரத்தைச் சார்ந்த மேல்சாதியினரான (மேல்சாதியென்பது இங்கு பிராமணீயத்தை தழுவியவர்கள் என்ற பொருளில் சுட்டப்படுகிறது) ரெட்டியார்களினாலோதான் நடத்தப்படுகிறது. அதனால்தானோ என்னவோ அதிகமும் சமஸ்கிருத மயமான பெயர்களே (ஆண், பெண்பாற் பெயர்கள்) பெரிதும் சைவ உணவகங்களுக்குச் சூட்டப்படுகிறது; உ.தா. மேற்குறிப்பிட்டவையே. இங்கு சரவண பவன் அண்ணாச்சியும் பிராமணியத்தைத் தழுவியவர் என்பதைக் கவனத்தில் கொள்க.
ஆனால், அசைவ உணவகங்கள் பெரும்பாலும் கீழ் சாதியினராகக் கருதப்படும் உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்ட சாதியினரால் நடத்தப்படுகிறது என நம்புகிறேன். (இவ்விசயத்தில் எனக்குச் சரியான தெளிவில்லை) எனவேதான் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களுக்கும் அவர்களது சாமியின் (சிறு தெய்வங்கள்) பெயர்களையோ (அய்யனார்), குடும்பப் பெயர்களையோ (பொன்னுச்சாமி) வைக்கின்றனர் என்பது என் யூகம்.இவ்விசயத்தில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைப் பின்னூட்டமிடவும்.
குறிப்பு:
இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது ஸ்டார் ஹோட்டல்கள், சாலையோர ஹோட்டல்கள் அல்லாத பிற நடுத்தர ஹோட்டல்களே.
பிராமணீயம் என்ற வார்த்தையை சமூக அறிவியல் பின்புலத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்; யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலல்ல. வேண்டுமெனில் பிராமணீயம் என்பதற்குப் பதில் பெருந்தெய்வ வழிபாடு என்ற பதத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

Test
பதிலளிநீக்குநீங்க ஏன் தமிழ்மணம் சேரலை? நிறைய பேர் பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்குமே?
பதிலளிநீக்குப்ரோக்ராமிங்க்ல பிரச்சனையா?
தமிழ்மணத்திலும் நான் இணைந்துள்ளேன் அனானி அவர்களே. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் என் பதிவை இப்போது நீங்கள் பார்க்கலாம். நன்றி.
பதிலளிநீக்குதங்கவேல்,
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிடும் பகுதிகளின் அக்கம் பக்கத்தில் தான் நான் இப்போது எல்லாம், மதிய உணவு சாப்பிடப் போய்க் கொண்டிருக்கிறேன்.
கூடுதலாக திநகர் பகுதியையும் சேர்த்துக் கொண்டு, இங்கே இருக்கும் உணவகங்களில் எந்தெந்த உணவகங்களில் எந்தெந்த ஐட்டம் நல்லா இருக்கும் என்று ஒரு பதிவிட்டால் எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்..
எப்படி வசதி?
(ஒருவேளை இப்படிப் பெண்பெயரில் ஹோட்டல் தொடங்குபவர்கள் வீட்டுப் பெண்களின் நகையில் தொடங்குவார்களோ என்னவோ.. இதெல்லாம் எப்படித் தான் யோசிக்கிறீங்களோ!!! கடவுளே! )
//கூடுதலாக திநகர் பகுதியையும் சேர்த்துக் கொண்டு, இங்கே இருக்கும் உணவகங்களில் எந்தெந்த உணவகங்களில் எந்தெந்த ஐட்டம் நல்லா இருக்கும் என்று ஒரு பதிவிட்டால் எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்.. //
பதிலளிநீக்குஅதுமாதிரி ஒரு எண்ணம் உள்ளது பொன்ஸ். பாகம் இரண்டு விரைவில் வெளிவரும்.
//ஒருவேளை இப்படிப் பெண்பெயரில் ஹோட்டல் தொடங்குபவர்கள் வீட்டுப் பெண்களின் நகையில் தொடங்குவார்களோ என்னவோ..//
அப்படியும் கூட இருக்கலாம்.
//இதெல்லாம் எப்படித் தான் யோசிக்கிறீங்களோ!!! //
பதிலளிநீக்குஆச்சரியம்தான்; ஆனால் சும்மா சொல்லக் கூடாது - நல்ல ஒரு critical analysis தான். ரொம்பவும் logical ஆகவும் இருக்கு.
நன்றி தருமி சார். என் பொழப்பே 'Logical thinking' வைத்துத்தானே ஓடிக்கிட்டிருக்கு. இப்படிச் சிந்திக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால்தான் (தொழில் அப்படி) இவ்வாறு எழுத முடிகிறது. இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
பதிலளிநீக்குநல்ல ஆய்வுதான்.ஆனால் ...
பதிலளிநீக்கு/
பிராமணீயம் என்ற வார்த்தையை சமூக அறிவியல் பின்புலத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்; யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலல்ல./
ஏன் இந்த நழுவல்?
/கூடுதலாக திநகர் பகுதியையும் சேர்த்துக் கொண்டு, இங்கே இருக்கும் உணவகங்களில் எந்தெந்த உணவகங்களில் எந்தெந்த ஐட்டம் நல்லா இருக்கும் என்று ஒரு பதிவிட்டால் எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்..
பதிலளிநீக்குஎப்படி வசதி?/
அம்மணி ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க. புத்தகக் கண்காட்சி போனாலும் சாப்பாட்டு நினைவு. அன்னைக்கு உட்லேண்ட்ஸ் ஹோட்டல் ஓனர் அழுத கதையை மட்டும் யாருக்கும் சொல்லமாட்டேன்.
நல்ல சிந்தனை!
பதிலளிநீக்குஇதே போல எனக்கு தோணியவை
ராயல் என பெயரிடப்பட்ட ஓட்டல் எல்லாமே முஸ்லிம் நண்பர்களால் நடத்தப்படுகின்றன! அதே போல, சிக்கன் பிரியாணி போடுமிடங்களுக்கு "பிஸ்மில்லா பிரியாணி" ன்னும் பீப் பிரியாணி போடுமிடங்களுக்கு "A1 பிரியாணி" ன்னும் பேர் வைச்சிருக்காங்க!
ஏன்னு தெரிஞ்சி சொன்னா உங்களுக்கு நல்ல கடையில பிரியாணி வாங்கித்தரேன்!