நாளை மறுநாள் (22/12/2012) மாலை ஆறு மணிக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஆ. மாதவனுக்கும், 2011-ல் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. ஜெயமோகன் மீது பற்றும், மதிப்பும் கொண்ட நண்பர்களால் நடத்தப்படுகிறது இவ்விழா. இந்தமுறை விருது வழங்க இளையராஜா வருகிறார் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. இன்று மாலை கோவை கிளம்புகிறேன். நாளை தங்கை வீட்டில் தங்கிவிட்டு சனியன்று மதியம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம் என் இருகிறேன். நண்பர்கள் பலரை நீண்டநாள் கழித்து சந்திக்கப்போகிறேன் என்பதால் உள்ளம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. சுனில் கிருஷ்ணன் போன்ற சில நண்பர்களை முதன்முறை நேரில் காணப்போகிறேன். சென்றமுறை கோவையில் இருந்தும், தங்கையின் குழந்தை -கோமதி இறந்துவிட்டதால், விருது நிகழ்ச்சிக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது.
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 20 டிசம்பர், 2012
திங்கள், 2 ஏப்ரல், 2007
சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பு!!!
நண்பர் பாலபாரதியின் ஒருங்கிணைப்பில், சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று (ஞாயிற்றுக் கிழமை) சென்னை, தி. நகர் நடேசன் பூங்காவில் பிற்பகல் 3.30 முதல் மாலை: 7.30 வரை சந்திப்பு நடைபெறும். இது குறித்த அறிவிப்பொன்றை அவரது வலைப்பதிவில் காணலாம். தமிழ் வலையுலகின் முக்கியமான ஆளுமைகள் சிலர் கலந்துகொள்வார்கள் எனத்தெரிகிறது.
சென்னையில் வசிக்கும் வலையுலக நண்பர்களே நீங்களனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். வெளியூர் நண்பர்களும் முடியுமானால் சந்திப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பாலபாரதியின் பதிவில் பின்னூட்டம் வழியாகவோ அல்லது அவரது கைத்தொலைபேசியில் (99400 45507) அழைத்தோ தங்கள் வருகையை உறுதி செய்யவும். என்னையும் தொடர்பு கொள்ளலாம். - 98413 90327.
நன்றி

சனி, 19 நவம்பர், 2005
வெள்ளி, 18 நவம்பர், 2005
புதன், 16 நவம்பர், 2005
Interview with Su. Raa
Here, I have published & will publish the transcription of Su. Raa's interview which is originally being published in PKS's blog.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)