பக்கங்கள்

வியாழன், 16 நவம்பர், 2006

நான் தந்தையானபோது...

கடந்த ஒன்றாம் தேதி (01/11/2006) எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அன்று என் மனைவிக்கும் பிறந்த நாள் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. நவம்பர் ஒன்றுதான் டுஎ டடெ என ஏற்கனவே எங்களுக்கு தெரியும். ஆயினும் அக்டோபர் 24ம் தேதியே குழந்தை பிறந்துவிட்டால் நல்லது என நினைத்தோம். ஏனெனில் அன்று எங்களுக்குத் திருமணநாள். ஆனால் மகப்பேறு மருத்துவர், அதற்கு முந்தைய பரிசோதனையன்று கண்டிப்பாக குழந்தை 24ஆம் தேதியன்று பிறக்காது என்றும், நவம்பர் 1ஆம் தேதி தாண்டினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை எனவும் கூறிவிட்டார். ஆதனால் நவம்பர் ஒன்று அன்று ஒரு ஸ்கேன் செய்துவிட்டு ஆஸ்பிட்டலில் வந்து சேர்ந்துகொள்ளும்படியும் கூறிவிட்டார். என் மனைவிக்கு இரத்தத்தில் சிறிது சர்க்கரை அளவு கூடுதலாகயிருந்ததால் (Gestational diabetes) நவம்பர் 1ஆம் தேதியே பிரசவ வலியை வரவழைத்து, குழந்தைக்கு ஏதும் பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பொருட்டு, குழந்தையை பிரசவித்துவிடலாம் எனச் சொல்லியிருந்தார். ஆனால், நல்லவேளையாக நவம்பர் 1ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்கே வலி ஏற்பட்டு என் மனைவியை ஆஸ்பிட்டலில் சேர்த்து விட்டோம். பிரசவ வலி விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வலி தெரியாமல் இருக்க என் மனைவிக்கு பெத்தடின் ஊசி போட்டிருந்தார்கள். அதையும் மீறி அவர் வலியால் துடிப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது. பெண்களால் மட்டும்தான் அதை உணர முடியும். மாலை 3 மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை. Cardiotocography - CTG என்ற கருவியைக் கொண்டு தொடர்ந்து கருப்பை சுருங்கி விரிதலையும், கருவின் இதயத்துடிப்பையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். 4.30 மணிக்குள் பிறந்துவிடும் என மருத்துவர் கூறியிருந்தார்.

3.30 மணிவரை பிரசவ அறையிலேயே என் மனைவியுடன் இருந்தேன். எனக்கு தலைவலி அதிகமாக இருந்ததால் சற்று தூரம் நடந்து சென்று ஒரு காபி அருந்தினால் நன்றாகயிருக்கும் என்றெண்ணி சற்று வெளியில் வந்தேன். 4.30 மணிக்குத்தானே இன்னும் நேரமிருக்கிறதே என்றெண்ணி சாலையின் மறுபுறம் கடந்து சற்றுதொலைவு சென்றிருப்பேன், திடீரென்று ஆஸ்பிட்டலில் இருந்த எனது உறவினரிடமிருந்து எனக்கு செல்பேசியில் அழைப்பு. உடனே வரும்படியும் குழந்தைக்கு ஆபத்து என்பதால் அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும் கூறினார். ஆஸ்பிட்டல் அமைந்திருந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையின் எதிர்புறம் செல்வதற்குள் இரண்டுமுறைகள் செல்பேசியில் அழைப்பு; விரைந்து வரும்படியும் என் மனைவியை ஆப்பரேசன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்வதாகவும் அவசரப்படுத்தினார். எனக்கோ சாலையைக் கடக்கும்போது, மனித வாழ்க்கையின் இந்த அருமையான தருணத்தில், எனக்கேதேனும் விபத்து நடந்து விடக்கூடாதே என்ற பயம் வேறு சேர்ந்துகொண்டது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாய் 3வது மாடியிலிருந்த பிரசவ அறையை அடையும் போது என் மனைவியை கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை அறைக்குள் கூட்டிச் சென்றிருந்தார்கள். கிட்டத்தட்ட மயக்க நிலையிலிருந்த என்மனைவியைப் பார்க்க கவலையாக இருந்தது. என்னால் அந்தநிலையை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏனெனில், கண்டிப்பாக அறுவை சிகிச்சை கூடாது என்பதில் நாங்கள் மிக உறுதியுடன் இருந்தோம். எங்கள் மகப்பேறு மருத்துவரும், என் மனைவிக்கு சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாகவே கூறியிருந்தார். மேலும், ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் என்றவகையிலும் எனக்கு உலகம் முழுதும் நடைபெறும் 'தேவையற்ற' பிரசவ அறுவை சிகிச்சைகளின் மீது ஒரு வெறுப்பு உண்டு. ஆனால், என் மனைவிக்கோ பிரசவத்தின் இறுதிப்பகுதியில் தீடிரென்று கருவின் இதயத்துடிப்பு குறையத் தொடங்கிவிட்டது. அது ஒரு நிமிடத்திற்கு 70 - 80 (சராசரியாக 120 - 140 இருக்கும்) துடிப்புகளென மிக அதிகமாகக் குறையத்தொடங்கியதால் குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு, வேறுவழியின்றி அறுவை சிகிச்சை செய்யவெண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக, மருத்துவர் அறுவை சிகிச்சை கூடத்திற்குச் செல்லும் வழியில் என்னிடம் கூறிச் சென்றார். ஆயினும், சுகப்பிரசவம்தான் என்ற ஒருவகையான obession ல் இருந்த என்னால் அச்சமயத்தில் அதை ஜீரணிக்கமுடியவில்லை.


மேலும், குழந்தை பிறக்கும்போது உடனிருந்து அக்குழந்தையின் முதல் அழுகையைப் பார்க்க வேண்டும் என்றுநினைத்திருந்தேன். எங்கள் மருத்துவரும் ஒத்துக்கொண்டிருந்தார். கடைசியில் அறுவை சிகிச்சை என்று சொன்னவுடன் எனக்கு சகலமும் மறந்து, என் ஆசையை அந்த மருத்துவரிடம் (எங்கள் மருத்துவர் அப்போது அருகில் இல்லாததால், வேறு மருத்துவர் பிரசவம் பார்த்தார்) வெளிப்படுத்தாமலே இருந்துவிட்டேன். சிறிது நேரத்தில், ஒரு செவிலியர் என்னை அழைத்து பிறந்த குழந்தையை எனக்குக் காண்பித்தார்கள். குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் என்னிடம் பெரிதாக உணர்ச்சி ஏதும் வெளிப்படவில்லை. அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. குழந்தை பிறந்து இரண்டு வாரங்களாகியும் அவனது முதல் அழுகையைப் பார்க்கமுடியவிலையே என்ற வருத்தம் எனக்கு இன்னும் இருக்கிறது. நாங்கள் நினைத்ததற்கு மாறாக மூன்றே நாட்களில் தாயையும், சேயையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இப்போது தாயும், சேயும் நல்ல நலமுடன் உள்ளார்கள்.

19 கருத்துகள்:

  1. நண்பர்களே,

    என் ப்ளாக்கர் comments பகுதியில் இருந்த சிறு பிழையை நீக்கி, இந்த இடுகையை மீண்டும் இட்டிருக்கிறேன். திரு Johan-Paris அவர்களின் பின்னூட்டத்தையும் இதனோடு இட்டிருக்கிறேன். அவர் இந்த இடுகையில் இன்று காலைவரை பின்னூட்டமிடமுடியாமையால் எனது பழைய இடுகையில் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளார். அவ்வளவு சிரமம் எடுத்து அவர் பின்னூட்டமிட்டதிற்கு நன்றி.

    Johan-Paris சொன்னது
    It is a wonderful massage,Best wishes to you and your family;God bless us Johan paris (In you blog there is no feedback way).

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் வேலு பாய்! (நாயகன் ஜனகராஜ் மாடுலேசனில் வாசிக்கவும்)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் தங்கவேல். நல்ல பதிவு.

    நேரமிருப்பின் http://varappu.blogspot.com/2006_06_01_varappu_archive.html பாருங்கள் 'ஜனனம்' என்ற தலைப்பில் நான் இதே சூழ்நிலையை எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாழத்துக்கள் தல...நானும் ட்ரை பண்ணேன்..அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்....

    பதிலளிநீக்கு
  5. நன்றி பாலபாரதி, வரும் ஞாயிற்று கிழமை சந்திக்கலாம். ILA(அ)இளா, முத்து உங்களுக்கும் நன்றி. ILA(அ)இளா கண்டிப்பாக உங்கள் பதிவையும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. Congratulations Mrs. & Mr. Thangavel.

    With warm regards,
    Mathy

    I had left a comment in your english blog. could you please delete it. Thanks.

    பதிலளிநீக்கு
  7. மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

    குழந்தைக்கு என்ன பெயர் வச்சீங்க?

    உங்க மனைவி& குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(கள்). ச்சும்மா ரெண்டு
    வாரம் பிந்திப்போச்சு:-)))))

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் புதிதாய் அப்பா ஆனவரே.

    கரு உருவானது முதல், வளர்ந்து, பிறக்கும் வரை, உடல் ரீதியான, மனரீதியான மாற்றங்கள் அனைத்தும் தாய்க்கே என்பதால், பிறந்த குழந்தையைக் கண்டவுடன் தாய் பரவசம் கொள்கிறாள். தந்தைக்கு, அக்குழந்தை வளர்ந்து, தன்னோடு உறவாடும்போதுதான் அந்த உணர்வு பெருகத் தொடங்கும். (ஆராய்ச்சியாளரான் தங்களுக்கு தெரிந்திருக்கும்தான்...)

    பதிலளிநீக்கு
  9. நன்றி துளசி அவர்களே, அமுதன் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. //கரு உருவானது முதல், வளர்ந்து, பிறக்கும் வரை, உடல் ரீதியான, மனரீதியான மாற்றங்கள் அனைத்தும் தாய்க்கே என்பதால், பிறந்த குழந்தையைக் கண்டவுடன் தாய் பரவசம் கொள்கிறாள். தந்தைக்கு, அக்குழந்தை வளர்ந்து, தன்னோடு உறவாடும்போதுதான் அந்த உணர்வு பெருகத் தொடங்கும். (ஆராய்ச்சியாளரான் தங்களுக்கு தெரிந்திருக்கும்தான்...) //

    முற்றிலும் சரி Krishna. ஆயினும் நான் குழந்தையை முதன்முதலில் பார்த்தமாத்திரத்தில் பரவசம் கொள்ளாததர்க்கு முக்கியமான காரணம், அவ்வளவு நேரம் சுகப்பிரசவம்தான் ஆகும் என்று பரிபூரண நம்பிக்கையுடன் இருந்துவிட்டு தீடிரென அறுவை சிகிச்சை ஆனதனால் உண்டான ஏமாற்றமே. ரொம்ப நேரம் கழித்துத்தான் இயல்பு நிலைக்கு என்னால் வரமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள்:)
    உங்கள் துணைவியருக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்!

    பிரசவ வலிக்காக, பெத்தடின் கொடுப்பது நம்மூரில் வழக்கமா? அது ஒரு narcotic என்று நினைக்கிறேன். சரியா?

    அமெரிக்காவில் சுகப்பிரசவத்துக்கு வலி தெரியாமலிருக்க எபிடியூரல்/epidural அனெஸ்தீஸியா கொடுப்பார்கள் (நாம் விரும்பினால். எபிடியூரலை மறுக்கும் பெண்களும் உள்ளனர்!)

    அறுவை சிகிச்சை என்றாலும் நீங்களும் சென்றிருக்கலாம் தான் (நீங்கள் ஆப்பரேசன் தியேட்டரினுள் அனுமதிக்கப்பட்டிருந்தால்)

    பதிலளிநீக்கு
  13. நன்றி சேதுக்கரசி.

    //அறுவை சிகிச்சை என்றாலும் நீங்களும் சென்றிருக்கலாம் தான் (நீங்கள் ஆப்பரேசன் தியேட்டரினுள் அனுமதிக்கப்பட்டிருந்தால்)//

    அவ்வளவு நேரம் சுகப்பிரசவம்தான் ஆகும் என்று பரிபூரண நம்பிக்கையுடன் இருந்துவிட்டு தீடிரென அறுவை சிகிச்சை என முடிவு செய்யப்பட்டதால், அந்த கணத்தில் எனக்கு சகலமும் மறந்து நானும் அறுவைகூடத்திற்குள்ளே வருகிறேன் எனக்கேட்கவே மிகவும் தயக்கமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா15 மே, 2007 அன்று PM 3:29

    poongothai

    What a coincidience i too had the same problem gestational diabetes and emergency sessarine. During my

    pregnancy when my doctor told gestational diabetes borderline go for walking and to be on dieting. I

    followed very sincerely all the steps and took lot of pain to avoid cessarine, but at last it turned to

    emergency cessarine, i was very upset first few days i cannot come up from that shock. Even today if i

    think about those days i will be very upset. Later on i convienced myself we cannot fight with nature.

    Though It is too late my hearty wishes to your wife and kid. Hope you will invite us for your son birthday

    which will fall after 5 month.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா15 மே, 2007 அன்று PM 3:30

    poongothai

    What a coincidience i too had the same problem gestational diabetes and emergency sessarine. During my

    pregnancy when my doctor told gestational diabetes borderline go for walking and to be on dieting. I

    followed very sincerely all the steps and took lot of pain to avoid cessarine, but at last it turned to

    emergency cessarine, i was very upset first few days i cannot come up from that shock. Even today if i

    think about those days i will be very upset. Later on i convienced myself we cannot fight with nature.

    Though It is too late my hearty wishes to your wife and kid. Hope you will invite us for your son birthday

    which will fall after 5 month.

    பதிலளிநீக்கு