பக்கங்கள்

வெள்ளி, 24 நவம்பர், 2006

வலைப்பதிவர் சந்திப்பு நடத்திய பாலபாரதிக்குக் கண்டனங்கள்

சென்னையில் கடந்த ஞாயிரன்று வலைப்பதிவர் சந்திப்பை, சென்னைப்பட்டிண நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தி நொந்து நூலாகி, அந்து அவலாகியிருக்கும் பாலபாரதியின் மேல் எனக்கு ஒரு வருத்தம். என்னடா ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறானே என நினைக்கிறீர்களா? அப்புறம் என்னுடய கோபத்தையும் (நியாயமான?!) பதிவு செய்யவேண்டாமா?

சரி சரி மேட்டருக்கு வாடான்னு நீங்க சொல்றது என் காதில் விழுகிறது. விசயம் இதுதான்; வலைப்பதிவர் சந்திப்பு முடிந்ததும், ஒரு சிறு குழு மட்டும் (வேற வேலை வெட்டி இல்லாத பசங்க - என்னையும் சேர்த்துத்தான்) ஏதாவது ஒரு உணவகத்திற்குச் (நன்றாகக் கவனிக்கவும் - உணவகம்) சென்று சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் எனத்தீர்மானிதோம். எங்கே செல்லலாம் என நடு ரோட்டில் விவாதம் நடைபெற்றது. எழும்பூர் தவிர வேறு எங்கு கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் எனக் குழந்தை பாலபாரதி மட்டும் அடம்பிடித்தது. அப்பதான் எனக்குப் புரிந்தது, அவருக்கு ஏன் குழந்தை பட்டம் சூட்டினார்கள் என்று. ஆனால், அக்குழுவில் பெரும்பாலோர், என்னையும் பாலபாரதியையும் தவிர, தென் சென்னைகாரர்களாக இருந்ததால், தி. நகரிலுள்ள ஏதாவது ஒரு உணவகத்திற்குச் செல்லலாம் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நாங்களெல்லாம் எந்த உணவகம் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு பக்கம் என ஆராய்ந்து கொண்டிருந்தால், முத்து தமிழினி மட்டும் ஹாயாக இருந்தார். என்னன்னு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது; லக்கியார், முத்துவை அவரது வீட்டில் டிராப் பண்ணப்போகிறார் என்ற விசயமே.

ஒருவழியாக உணவகம் போய்ச்சேரும்போதே இரவு மணி எட்டாகிவிட்டது. நான், அன்று சவேரா ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கவிதைப் புத்தக வெளியீட்டுவிழாவை, எனக்கு அழைப்பிதழ் இருந்தும், இவ்வலைப் பதிவர் சந்திப்பினால் தவிர்த்துவிட்டேன். ஏற்கனவே அந்தக் கடுப்பில் இருந்த என்னை, மேலும் கடுப்பேற்றும் விதமாக பாலபாரதி, நான் வீட்டிற்குப் போகும் வழியில் தன்னையும் இறக்கிவிட்டுவிட வேண்டுமென கண்டிப்புடன் கூறிவிட்டார். என்னால் முடியாது எனக்கூறவும் தர்மசங்கடமாகிவிட்டது. ஏனெனில் அன்று எனக்குப் பிறந்தநாள் வேறு, அதை உளறித் தொலைத்துவிட்டால் மொத்த பில்லையும் நம் தலைமேல் கட்டிவிடுவார்களே என்ற பயம்தான்? ஏற்கனவே ஓகை வேறு, உங்களுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளதால் நீங்கள்தான் பார்ட்டி கொடுக்கிறீர்களா எனக் கேட்டிருந்தார். நல்லவேளையாக அவர் கேட்டது வரவணையான் காதில் விழவில்லை (அவர்தானே பார்ட்டிக்கு எல்லாரையும் கூப்பிட்டது). ஒருமணி நேரத்தில் கிளம்பி விடலாம் என பாலபாரதி சொன்னதை நம்பி அங்கு வந்தது எவ்வளவு தப்பு என்பது போகப்போகத்தான் தெரிந்தது. ஒன்பது, ஒன்பதரை ஆகி இரவு பத்தும் ஆகிவிட்டது.

ஆனால் ஒருவரும் கிளம்புவது மாதிரி தெரியவில்லை. அதற்குள் என் துணைவியாரிடமிருந்து செல்பேசியில் அழைப்புகள் வரத்தொடங்கியிருந்தன. எங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு எனக்கு வரும் முதல் பிறந்தநாள் அல்லவா, மூன்று பேரும் செர்ந்து கொண்டாடலாம் என துணைவியார் திட்டம் போட்டிருந்தார். நானோ எட்டு மணிக்கெல்லாம் அங்கு வந்துவிடுகிறேன் எனக்கூறிவிட்டு, அவ்வளவு நேரமாகியும் வராததால் அவரும் பொறுமையிழந்து, உங்களுக்கு பொண்டாட்டி புள்ளையைவிட உங்கள் நண்பர்கள்தான் முக்கியம் எனத் திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் என் அப்பாவிடமிருந்து வேறு எப்போ வர்ற என அழைப்புகள். நான் மறுநாள் அதிகாலை பூனா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு நான் அதுவரை என் துணிமணிகள் எதையும் எடுத்து வைத்திருக்கவில்லை. அதற்குத்தான் அவர் என்னை செல்பேசியில் அழைத்து, உனக்கு எப்பவும் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்வதே வாடிக்கையாகிவிட்டது என திட்டிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் சாமாளித்து ஒரு வழியாகக் கிளம்பலாம் என நினைக்கையில், பாலபாரதியின் (திருமணம் ஆகாதவர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது) செல் செல்லமாகச் சிணுங்கியது. அந்த ரிங் டோனைக் கேட்டதும், பாலபாரதி ஓரமாக ஒதுங்கி ஏதோ குசு குசுவென்று பேசினார். இதைக் கவனித்துவிட்ட முத்து தமிழினி, வரவனையானிடம் ஏதோ சைகை செய்தார். உடனே வரவனையான், பாலபாரதி அருகில் செல்ல முயற்சிக்க, பாலா அவரை விரட்டிவிட்டார். ஒருவழியாக அவர் பேசிமுடித்ததும், அவரை இழுத்து நேரமாகிவிட்டது என உணர்த்தினேன். அதற்குள் மணி 10.45 ஆகிவிட்டிருந்தது. பின்பு நானும், அவரும் மட்டும் கிளம்பி வீட்டிற்குச் சென்றோம். பாலபாரதியை கெல்லீஸ் சிக்னலில் இறக்கிவிட்டு விட்டு நான் வீடு போய்ச் சேரும்போது 11.30 ஆகிவிட்டது. என் மனைவிக்கு, நான் மறுநாள் காலை பூனா செல்லும்முன்பு அவரையும், குழந்தையையும் பார்க்க வருகிறேன் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன். தொலைபேசினால், திட்டுவாங்கனுமே அதான். (என் மனைவி, தற்போதுதான் குழந்தை பிறந்துள்ளதால், அவரது அம்மா வீட்டில் உள்ளார்) பின்பு என் வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் திட்டுவாங்கிக் கொண்டே துணிமணிகளை சூட்கேசில் அடுக்கினேன்.

இவ்வாறு, அன்று வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியதன் மூலம் என்னை பல்வேறு தர்ம சங்கடங்களுக்கு ஆளாக்கியதற்காக பாலபாரதியைக் கண்டித்து ஒரு பதிவு போடாவிட்டால் நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன். எனவே தான் இந்தப் பதிவு.

குறிப்பு: என்னதான் என் மனைவியிடமும், அப்பாவிடமும் நான் திட்டுவாங்கி இருந்தாலும், (வழக்கமாக வாங்குவதுதான், ஹி! ஹி!) அவ்வலைப் பதிவர் சந்திப்பின் மூலம் அதுவரை முகம் தெரியாத பல நல்ல நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது. அதுவே நான் வாங்கிய திட்டையெல்லாம் மறக்கச் செய்துவிட்டது. அதற்கு வழிவகை செய்த பாலபாரதிக்கும், ஏனைய சென்னைப் பட்டிண நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

28 கருத்துகள்:

  1. வெறும் கண்டனங்கள் மட்டும் தானா? பாலபாரதி வித்லோகாவில் தான் இருப்பார்னு நினைக்கிறேன்.. ஒரு ஆட்டோ அல்லது கால்டாக்ஸி அனுப்பறது.. ;)

    பதிலளிநீக்கு
  2. பாகச வரவர அடியாள் படையா வேற மாறிகிட்டு வருதா?

    பாலா! சீக்கிரமே கமிஷனர் கிட்ட பாதுகாப்பு கேட்டு ஒரு மனு கொடுத்திடுங்க

    பதிலளிநீக்கு
  3. ஓகோ, தாங்கள் முன்னமே வாழ்த்து தெரிவித்து பின்னுட்டமிட்டு, மீட்டிங் அட்டெண்ட் பண்ணினீர்களோ பிழைத்தீர்கள்...இல்லேன்னா இப்பிடி பதிவெழுத முடியுமா?...விட்டுடுவமா?

    பதிலளிநீக்கு
  4. சரி, போனதெல்லாம் போட்டும்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. கமிஷனர் கிட்ட பாதுகாப்பு கேக்க சொன்னா வேறெங்கெயோ கேட்டிருக்கீங்களே?
    பாலா இது நியாயமா?

    பதிலளிநீக்கு
  6. Ayya kolaru unga pakkame! Theethum nandrum pirar thara vaara!!

    Iniyavathu.. Dont say YES, when you want to say NO!

    -G.Gowtham from Balabarathiyai pathukappor sangam!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  7. பொன்ஸ், ஆட்டோ அனுப்பிட்டா போச்சு

    சிந்தாநதி, பாலா யாருகிட்ட பாதுகாப்பு கேட்டிருக்கிறாரு, புதுசாயிருக்கே

    தங்கள் வருகைக்கு நன்றி அனானி

    துளசி, நீங்க இந்த மாதத்தில் எங்கள் குடும்பத்தில் மூன்று பேருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் கெளதம்,நீங்கள் குறிப்பிடுவதுதான் என்னிடமுள்ள முக்கியமான குறை. நானும் அதை நிவர்த்திபண்னத்தான் தொடர்ந்து முயற்சிக்கிறேன். மற்றபடி இப்பதிவு ஒரு ஜாலிக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  9. //இவ்வாறு, அன்று வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியதன் மூலம் என்னை பல்வேறு தர்ம சங்கடங்களுக்கு ஆளாக்கியதற்காக பாலபாரதியைக் கண்டித்து ஒரு பதிவு போடாவிட்டால் நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன். எனவே தான் இந்தப் பதிவு.
    //

    ஆமாமா.., 'கடத்தேங்காயை எடுத்து..' அப்படின்னு பழமொழி தான் நியாபகத்துக்கு வருது. ஹிட் ஏறனும்னா இப்படி ஏதாவது எழுதினாத்தான் உண்டு! ஹி..ஹி..

    அண்ணன் உடையானும் படை, சொறி சிரங்கு, தேமல், மெடிமிக்ஸ் எதுக்கும் அஞ்சான்... அண்ணன் கௌதம் வாவாவாவாவாவாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ககககக!!!!!!
    ;-)))))

    பதிலளிநீக்கு
  10. பாலா அண்ணாவை நானும் கண்டிக்கிறேன்.

    வீட்டுக்கு போகும்போது நடுநிசி 12.00 என் நெலமை என்ன ஆகியிருக்கும்ணு யோசிச்சி பாருங்க

    பதிலளிநீக்கு
  11. தங்கவேல் தங்களின் பதிவிற்க்கு நான் வருவது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன்!இனி அடிக்கடி வர முயற்ச்சிக்கின்றேன்!

    //பாலபாரதி ஓரமாக ஒதுங்கி ஏதோ குசு குசுவென்று பேசினார்//

    பாலாவோட பாட்டி(கவனிக்க: பார்ட்டி அல்ல) ஃபோன் பண்ணி வரும்போது வெத்தலை பாக்கு வாங்கி வர சொல்லி இருப்பாங்க! அவரு அதை வெளிக்காட்டாமல் பந்தா விட்டிருக்கின்றார்! நீங்கள் அதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!:))

    தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!(Belated Birthday Wishes--க்கு தமிழ்ல சரிதானே)


    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  12. //மேலும் கடுப்பேற்றும் விதமாக பாலபாரதி, நான் வீட்டிற்குப் போகும் வழியில் தன்னையும் இறக்கிவிட்டுவிட வேண்டுமென கண்டிப்புடன் கூறிவிட்டார். என்னால் முடியாது எனக்கூறவும் தர்மசங்கடமாகிவிட்டது. //

    உங்க கிட்டயுமா? எல்லாரும் சேர்ந்து இவருக்கு ஒரு வண்டி ஓட்ட லைசென்ஸ் வாங்கிக்கொடுங்கபா!!! இவர் ரவுசு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு :)))))

    பாலாபாய், என்ன பா.பா.ச ஆரம்பிச்சு இருக்கீங்க போல... கெளதம் சாரை தான் முதல் உருப்பினரா சேர்த்து இருக்கீளா?? அவருக்கு Dual Membership இருக்குபோல ;) ... என்ன இருந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பும், ஆப்பும் நாங்க(பா.க.ச) தான் வைப்போம் என்பதை அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  13. அடப்பாவி பாலா, நான் ஹிட் ஏறனும்னு தான் இப்படி ஒரு பதிவு போட்டேன்ற உண்மையைக் கண்டுபிடிச்சுட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  14. //'கடத்தேங்காயை எடுத்து//
    அந்தப் பழமொழி இந்த இடத்துக்கு எப்படிப் பொருந்துதுன்னு புரியலியே... :(

    பதிலளிநீக்கு
  15. //பாலா யாருகிட்ட பாதுகாப்பு கேட்டிருக்கிறாரு, புதுசாயிருக்கே//

    இதோ இங்க தான்.

    //இல்லேன்னா இப்பிடி பதிவெழுத முடியுமா?...விட்டுடுவமா?//
    [+]
    -G.Gowtham from Balabarathiyai pathukappor sangam!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  16. // luckylook said..
    வீட்டுக்கு போகும்போது நடுநிசி 12.00 என் நெலமை என்ன ஆகியிருக்கும்ணு யோசிச்சி பாருங்க//

    லக்கி உங்களை நடுநிசி நாய்கள் எதுவும் துரத்தலியே. ஏன்னா இது கார்த்திகை மாசம் வேற

    பதிலளிநீக்கு
  17. ifc fan, தங்கள் வருகைக்கு நன்றி.

    //உங்கள் நண்பன் ...
    தங்கவேல் தங்களின் பதிவிற்க்கு நான் வருவது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன்!இனி அடிக்கடி வர முயற்ச்சிக்கின்றேன்!//

    அடிக்கடி வாங்க உங்கள் நண்பன்-சரவணன், நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அது என்னப்பா - 'பாகச' யாராவது விளக்குறீங்களா

    பதிலளிநீக்கு
  19. //எல்லாரும் சேர்ந்து இவருக்கு ஒரு வண்டி ஓட்ட லைசென்ஸ் வாங்கிக்கொடுங்கபா!!! //

    ரொம்ப சரி - we the people.


    //'கடத்தேங்காயை எடுத்து...
    அந்தப் பழமொழி இந்த இடத்துக்கு எப்படிப் பொருந்துதுன்னு புரியலியே... :(//

    எனக்கும் புரியலை பொன்ஸ். ஏதோ பாலா குழப்பத்தில் உளறிவிட்டார் போல.

    ////பாலா யாருகிட்ட பாதுகாப்பு கேட்டிருக்கிறாரு, புதுசாயிருக்கே//

    இதோ இங்க தான்.

    //இல்லேன்னா இப்பிடி பதிவெழுத முடியுமா?...விட்டுடுவமா?//
    [+]
    -G.Gowtham from Balabarathiyai pathukappor sangam!!!!!!!!!!!!!//

    இப்ப புரியுது சிந்தாநதி.

    பதிலளிநீக்கு
  20. //லக்கி உங்களை நடுநிசி நாய்கள் எதுவும் துரத்தலியே. ஏன்னா இது கார்த்திகை மாசம் வேற//

    பிரச்சினை நாய்களால் அல்ல

    பதிலளிநீக்கு
  21. லக்கி உங்களுக்கு குறும்பு ரொம்ப ஜாஸ்தி

    பதிலளிநீக்கு
  22. //அது என்னப்பா - 'பாகச' யாராவது விளக்குறீங்களா//

    இவ்வளவு நேரம் ராமாயணம் கேட்டுட்டு....

    இப்படிக் கவுத்துட்டிங்களே!!!;-))))

    பதிலளிநீக்கு
  23. மெய்யாலுமே எனக்குத் தெரியாது சிந்தாநதி. தயவு செய்து 'பாசக' விரிக்கவும்

    பதிலளிநீக்கு
  24. ஓ இதுதான் பாகச வா? (பாகச - பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம்), ரொம்ப நன்றி பொன்ஸ். இப்பதிவின் மூலம் நானும் அதில் உறுப்பினர் ஆகிவிட்டேனில்ல.

    பதிலளிநீக்கு
  25. உறுப்பினரா சேந்ததுக்கு அப்புறமா சங்கத்தோட பேரக் கேட்கிற முதல் ஆள்?

    பதிலளிநீக்கு