வியாழன், 20 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் விருது - 2012

நாளை மறுநாள் (22/12/2012) மாலை ஆறு மணிக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஆ. மாதவனுக்கும், 2011-ல் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. ஜெயமோகன் மீது பற்றும், மதிப்பும் கொண்ட நண்பர்களால் நடத்தப்படுகிறது இவ்விழா. இந்தமுறை விருது வழங்க இளையராஜா வருகிறார் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. இன்று மாலை கோவை கிளம்புகிறேன். நாளை தங்கை வீட்டில் தங்கிவிட்டு சனியன்று மதியம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம் என் இருகிறேன். நண்பர்கள் பலரை நீண்டநாள் கழித்து சந்திக்கப்போகிறேன் என்பதால் உள்ளம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. சுனில் கிருஷ்ணன் போன்ற சில நண்பர்களை முதன்முறை நேரில் காணப்போகிறேன். சென்றமுறை கோவையில் இருந்தும், தங்கையின் குழந்தை -கோமதி இறந்துவிட்டதால், விருது நிகழ்ச்சிக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. 


விழா அழைப்பிதழ்