நடந்துகொண்டிருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவாளர். ராகுல்காந்தி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்னவோ அவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்ற தொனியில் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்ன செய்ய!?, இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட சுட்டியைச் சொடுக்கவும். அவர் பேசியதின் முதன்மையான சில வரிகள் இங்கே.
"I belong to the family which has never moved backwards, which has never gone back on its words. You know that when any member of my family had decided to do anything, he does it. Be it the freedom struggle, the division of Pakistan or taking India to the 21st century,''
உங்கள் ஆதங்கம் நியாயமே. நம்மவர்களின் சாதித்திமிருக்கு அடுத்ததாய் இந்த குடும்பப்பெருமையும் ஒரு அபாயகரமான ஆதிக்க மனோபாவமே. ரொம்ப பெரிய குடும்பங்கள்தான்னு இல்லை, சாதாரண ஆட்கள் கூட ஊர்ல எங்க அப்பா நடந்து வந்தார்னாலே... அப்படின்னெல்லாம் ஒவர் பில்டப் கொடுக்கறதை பார்க்கலாம். உண்மையில ஊருக்கு போய் பார்த்தோம்னால், அவங்க அப்பா வந்தாலே பிடிடா அந்த ஆளை அப்படின்னு பின்னால ஒடி வர பெரிய கடன் கொடுத்தவங்க கும்பல்தான் காத்துகிட்டிருக்கும்.நம்ம கே.எஸ். ரவிக்குமார் மாதிரியானவங்க வேற வருஷத்துக்கு ஒரு படம் நீ மானத்துல கவரிமான் , வீரத்துல புலி அப்படி இப்படின்னு ஒரு பாட்டு போட்டு அதுக்கு பத்து பதினைஞ்சு அல்லக்கைங்களுக்கு மத்தில உடம்பு பூரா சந்தனத்தோட விஜயகுமார், சரத்குமார், வினுசக்ரவர்த்தி வகையறாக்களை நடக்கவிட்டு வேற ஊரைக்கெடுத்துகிட்டு அலையறாங்க. நாமதான் உயர்ந்தவங்க அப்படின்னு ஒரு குறுகின வட்டத்தை உயர்த்தும்போதே மற்றவர்களை கேவலப்படுத்தறதும் ஆரம்பிச்சுடும் - அது ஜாதியின் பெயரிலானாலும் சரி, குடும்பத்தின் பெயரிலானாலும் சரி. அதுலயும் பிரதமர் பதவிக்கு வருவதற்கு மிகப்பிரகாசமான வாய்ப்புகளுள்ள ஒருவர் இப்படி யோசிப்பது , என்ன சொல்ல, நம்ம தலையெழுத்து. அவ்ளோதான்.
பதிலளிநீக்குஇதெல்லாம் குலப்பெருமை மற்றும் வீண்ஜம்பம் தான் தங்கவேல். வேறென்ன சொல்ல?
பதிலளிநீக்குசெங்கிஸ்கானையும், தைமூரையும் மூதாதையராக கொண்ட இந்தியாவை 300 வருடம் ஆண்ட மொகலாய வம்சம் இன்று ஏதோ கோயில் மூலம் நிதி உதவி பெற்று வாழ்வதாக எழில் எழுதியிருந்தார்.குலப்பெருமை பேசுகிறவர்கள் அதை நினைவில் வைத்துக்கொண்டால் சரி.
அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சி உள்ளவர்கள் இம்மாதிரி பேசமாட்டார்கள்,இந்திரா அம்மையார் ஈழத்தமிழர் பிரச்சினையை கரிசனையுடன்
பதிலளிநீக்குஉண்மையினை உணர்ந்து அனுகிய விதமும் அதை அலட்சிய,அகம்பாவப் போக்குடன் ராஜீவ் போட்டுடைத்ததுமே வாக்கை காப்பாற்றுகிற,பின்னோக்கி செல்லாத பரம்பரைக்கு உதாரணம்
முதல் காரணம் ராகுலுக்கு இன்னும் பக்குவமில்லை நண்பரே..
பதிலளிநீக்குவயது 37தானே ஆகிறது.. அனுபவங்கள்தான் மனிதர்களுக்கு மிகப் பெரிய ஆசான். நேருஜிக்கும், இந்திராகாந்திக்கும், ராஜீவ்காந்திக்கும் இப்படியேதான் கிடைத்தது.. ராகுல்காந்திக்கும் கிடைக்கும் என நம்புவோம். இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்பது எனது கருத்து.
சிறுவரின் பேச்சையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன.
மாநில முதல்வர்களும், கவர்னர்களும், ஜனாதிபதியாக வர வேண்டி குழைபவர்களும் வரவேற்புரையில் காத்துக் கிடந்தால் வீட்டுக்காரனின் 'பெருமை' பேசத்தானே செய்யும்..
உண்மைத் தமிழன்:
பதிலளிநீக்கு"இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்பது எனது கருத்து." .
நீங்க எந்த உலகில் வாழுறீங்க சாமி! நம்ம டாக்டர் மன்மோகன் சிங் என்ன திருவாய் மலர்ந்தருளியுள்ளார் என்பதை வாசிக்கவில்லையா?
"ராகுல் தான் உங்கள் எதிர்கால்த்தின் நம்பிக்கை நட்சத்திரம்"
நாங்க அன்பவிக்கிறது ஜனனாயகம் இல்ல சாமி!.
புள்ளிராஜா
//இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.//
பதிலளிநீக்குராகுல்காந்தி குடும்பப் பெருமை பேசினது வைச்சு நீங்க இப்படி சொல்றது நியாயம் இல்லை. இந்திய மக்கள் அப்படி ஒன்றும் மடத்தனமாக தேர்ந்தெடுக்கிறவர்கள் அல்ல. 1975 பாசிசத்தன்மை கொண்ட இந்திராவை தூக்கி எறிந்ததாகட்டும், 1998 இல் சோனியாவை நிராகரித்ததாகட்டும், பாஜகவின் முட்டாள்த்தனமான இந்தியா ஒளிர்கிறதை 2004 இல் நிராகரித்ததாகட்டும் ... இந்திய ஜனநாயகம் முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறது.
அனானி நண்பரே.. இவ்ளோ தூரம் பதிலுரை கொடுக்கும் அளவுக்கு திறமை இருந்தும் ஏன் இஇப்படிப் போலித்தனமாக முகம் காட்டாமல் வருகிறீர்கள்..? எதற்காக இந்தப் பயம்?
பதிலளிநீக்குசரி பரவாயில்லை. தங்களது கருத்தைச் சொல்லிவிட்டீர்கள்.. இதற்கு எனது பதில்..
இப்போது நீங்கள் ஒரு கம்பெனி நடத்துகிறீர்கள். கம்பெனியை நிர்வகிக்க உங்களது மகனுக்கு இன்னும் பக்குவமும், வயதும் வரவில்லை. அதுவரை வேறொருவரை தற்காலிக நிர்வாகியாக நியமித்திருக்கிறீர்கள். உங்கள் மகன், "நான் இந்த கம்பெனியை, இனி வரும் காலங்களில் கையாளப் போகிறேன்.." என்கிறான். இதைக் கேட்கும் தற்காலிக நிர்வாகி என்ன சொல்லுவார்? "தம்பிக்கு அந்த தகுதி நிச்சயம் உண்டு. கம்பெனியின் எதிர்காலமே தம்பியின் கையில்தான்.." என்று சொல்லுவாரா? மாட்டாரா? அதைத்தான் இப்போது திரு.மன்மோகன்சிங்கும் செய்திருக்கிறார். அவ்வளவுதான்..
இதைப் போய் ஏன் மறுபடியும் பெரிதுபடுத்துகிறீர்கள். சிறுவர்களின் பேச்சு சிரிக்க மட்டுமே..