இன்று (22/11/2005) சென்னையில் நடைபெறவிருந்த இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவ மழைக்காலம்; இம்மாதங்களில் எந்த நாளிலும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் தொடர்ந்து கடந்த மூன்று முறைகளாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, அது பின்னர் மழையால் ரத்து செய்யப்படுவது கேலிக்கூத்து. எத்தனையோ ஆட்டங்கள் சென்னயைத்தவிர இந்தியாவின் பிற நகரங்களில் மற்ற 10 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றையேனும் சென்னையில் நடத்தாமல் மிகச் சரியாக இந்த இரு மாதங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்வது வாரியத்தின் அலட்சியமா அல்லது அறிவீனமா. (நல்ல பட்டிமன்ற தலைப்பு!!!)
Greetings from the USA.
பதிலளிநீக்குசென்னையின் மழை காரணமாக கிரிக்கெட் ரத்தானாலும், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பட்டை நாமம் சாத்தியுள்ளனர். இது முறையா? ரசிகர்களை சுரண்டுவதல்லவா?
பதிலளிநீக்குகே. செல்வப்பெருமாள்