வணக்கம்! வாழிய நலம் சூழி!
தமிழில் வலைப்பூ ஆரம்பிக்கவேண்டும் என்ற என் நெடுநாளைய கனவு இப்போதுதான் நனவாகிறது. (வலைப்பூ / வலைப்பதிவு இரண்டில் எது சரி?) அதற்காக வீட்டில் ஒரு கணிணியும், இணையத் தொடர்பிற்கு ஒரு தொலைபேசி இணைப்பும் வாங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்போதுதான் நான் சோம்பேறித்தனம் என்னும் போர்வையை விலக்கி துயில் எழுந்துள்ளேன். இதுவரை நான் படித்த நாவல்களிலேயே எனக்குப் பிடித்த நாவலின் பெயரான 'ஒரு புளியமரத்தின் கதை'யையே என் வலைப்பதிவிற்கும் பெயராக வைத்துள்ளேன். அந்த நாவல் மட்டுமல்ல, அதை எழுதிய சுந்தர ராமசாமியையும் (சு.ரா) ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாது ஒரு சிந்தனாவாதியாகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது.
முதலில் இந்த வலைப்பதிவை ஆங்கிலத்தில் தான் ஆரம்பித்தேன். (இதைத் தமிழில் ஆரம்பிப்பதற்கு நண்பர் பகுத்தறிவாளர் உதவி புரிந்தார்) அதில் சு.ரா வின் மரணம் குறித்து (அ) அவருக்கு நடைபெறும் அஞ்சலிக் கூட்டங்கள் குறித்து அறிவித்த வலைப்பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தேன். அவைகளை மீண்டும் இங்கு தருகிறேன்.
இந்த வலைப்பதிவில் எனக்கு அவ்வப்போது தோன்றுவதையும், படித்ததையும் பற்றி எழுதலாமெனயிருக்கிறேன். அவ்வப்போது எனக்குப்பிடித்த சு.ரா.வின் மேற்கோள்களையும் இடுவேன். இதை ஆரோக்கியமான ஒரு விவாதக் களமாக்கவும் ஆசையுண்டு. வாருங்கள் விவாதச் சமர் புரிவோம்.
பேரன்புடன்
தங்கவேல்
keep it up
பதிலளிநீக்குவாழ்த்துகள். இனிமேல் நிறைய பதிவுகள் கொடுங்க. படிக்க நாங்க இருக்கிறோம்.
பதிலளிநீக்குஇனிமையான வரவேற்புகள் தங்கவேல்..
பதிலளிநீக்குபுளிய மர நிழலில் தமிழால் இளைப்பாறுவோம்....
ஊக்கமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
பதிலளிநீக்குஉங்கள் வரவு நல்வரவாவுக!!!
பதிலளிநீக்குநானும் காலச்சுவடு வாசகன். 1997ல் அதில் இரு கட்டுரை எழுதியுள்ளேன்.
பதிலளிநீக்குநமது பணகுடி வெப்சைட் பார்க்கவும்.
www.panagudi.netfirms.com
நமது சைவநெறி சைட்டையும்
www.saivaneri.org
பார்க்கவும்
கூகிள் எர்த்தில் பணகுடி பார்த்தேன். ரொம்ப அருமை. நீங்களும் பார்க்கவும்.
பதிலளிநீக்குhttp://www.panagudi.netfirms.com/panagudi-photos-on-google-earth.htm
Google Earth does a good job.
Pasu G,
பதிலளிநீக்குYes, I too had seen Panagudi in Google Earth. Wonderful! As you rotate the image, one can even see the peaks of Mahendragiri. Well done Google.