"அம்மா இஸ் கோயிங் டு ஹாஸ்பிட்டல், பாப்பா இஸ் கமிங் ஃப்ரம் வயிறு" - இவை அமுத மொழிகள்.
"சனிக்கிழமை என் வயிற்றிலிருந்து பாப்பா பிறந்துவிடும், அதனால், அன்று ஸ்கூலுக்கு நீ லீவு போட்டுவிட்டு” என்று அமுதனிடம் என் மனைவி சொன்னாள். "நான் லீவு போட்டுவிட்டால் அமுதன் ஏன் வரவில்லை என மேடம் கேட்பார்களே?" எனக் கேட்ட அமுதன் பின் அவனாகவே சொன்னதுதான் மேலே குறிப்பிட்டது.
ஐந்து வருடங்களுக்கு மேல் அமுதன் செல்லமாக வளர்ந்துவிட்டான், அடுத்து போட்டிக்கு ஆள் வரப்போகிறது. தம்பியோ, தங்கையோ பிறந்தபின் அதை அமுதன் எப்படி எதிர்கொள்வான் என்பதைக் கற்பனை செய்து பகிர்ந்துகொள்வதே கடந்த சில மாதங்களாக எங்களது முக்கியமான பொழுதுபோக்கு. நாளையிலிருந்து அதை நேரடியாக அனுபவிக்கப்போகிறோம்.