
நேற்று ஒரு வலைத்தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது இக் காணொளிக் காட்சியைப் பார்த்தேன். ஏற்கனவே டிஸ்கவரி தொலைக்காட்சியிலும், பிறிதொருமுறை மின்னஞ்சலில் யாரோ அனுப்பியும் இதைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்படி நாவல், சிறுகதை படிக்க ஒரு மனப்பதிவு வேண்டுமோ அப்படியே இது போன்ற வரலாற்று ஆவணங்களையும் பார்க்க படிக்க அதற்கென்று ஒரு மனநிலை அவசியம் வேண்டும். நம்ம ஊர் விட்டு வேறு ஊர் வந்தபின்புதான் அதற்கான மனநிலை எனக்கு வாய்க்கப் பெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இக்காணொளி ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் அழகையும் அதன் கம்பீரத்தையும் குறித்து பேசும் அதே வேளையில்அது எவ்வாறு கட்டப்பட்டிருக்க வேண்டும், ஏன் அதை ராஜ ராஜ சோழன் கட்டுவித்தான் என்பதற்கான ஊகத்தையும் அளிக்க முயல்கிறது. வழக்கமாக மேலைத்தேய ஆராய்ச்சியாளர்கள் நம் பண்பாட்டை புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனினும் சில காரணங்களுக்காக இதை இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
nice article.
பதிலளிநீக்குhttp://hindutreasure.blogspot.com/
// அத்தீவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சோழர்களின் கடற்படை வந்திறங்கி எரிமலைகளைக் கொண்ட அத்தீவை தீமைத் தீவு என்று பெயரிட்டதாகவும், அது பற்றிய குறிப்பு தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் இருப்பதாகவும் அறிந்தபோது //
பதிலளிநீக்குநீங்கள் சுட்டி கொடுத்துள்ள பக்கங்களில் இந்தத் தகவல் இருப்பதாகத் தெரியவில்லையே. நான் தவறவிட்டுவிட்டேனா?