பக்கங்கள்

வியாழன், 12 ஜனவரி, 2012

சென்னை புத்தகக் காட்சியும், பழைய புத்தகங்களும்

கடந்த பல வருடங்களாக சென்னை புத்தகக் காட்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன். 1995- ஜூலையில் நான் சென்னையில் நிரந்தரமாக வாழும் எண்ணத்துடன் வந்தேன். அப்படியாயின் கிட்டத்தட்ட 17 வருடங்களாக இப்புத்தகக் காட்சிக்கு ஒரு சடங்கு மனநிலையுடன் வருகிறேன். இடையில் சில வருடஙகள் இந்த முறை புத்தகங்கள் ஏதும் வாங்கக் கூடாது, ஏற்கனவே வாங்கியவைகளை படிக்காததால்,  என்று சங்கல்பம் செய்து கொண்டு வருவேன். ஆயினும் குறைந்த அளவிலாவது புத்தகங்கள் வாங்காமல் திரும்பிப் போனதில்லை. இப் புத்தகக் காட்சி முன்பு காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்தபோதும், இப்போது புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும்போதும் பழைய புத்தகங்கள் நடைபாதைக் கடைகளில் வைத்து விற்கப்படும். சென்னையிலும், வேறு பல ஊர்களிலுமிருந்தும் பலர் வந்து இக்கடைகளை விரித்திருப்பர். நான் பழைய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவனில்லை. முன்பு சிற்சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். ஆனால் புத்தகக் காட்சி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்தேன்.

என் கல்லூரிக்கால நண்பன் ஒல்லி பாலாஜிக்கு, குண்டு பாலாஜி என்று வேறொரு நண்பனும் உண்டு, நான் cheap and best என்று பெயர் வைத்திருந்தேன். காரணம், அவன் பற்பசை முதற்கொண்டு எந்தப் பொருள் வாங்கினாலும் உள்ளதிலேயெ குறைந்த விலையுள்ள பொருளைத்தான் வாங்குவான். ஒருமுறை பற்பசை ஒரு டஜன் வாங்கினால் அதிகத் தள்ளுபடி தருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு இரண்டு டஜன் வாங்கிக் கொண்டு வந்தான். எதுக்குடா இரண்டு டஜன் என்றால், ஒன்று சித்தி வீட்டுக்காம். இப்பேர்ப் பட்ட ஒல்லி பாலாஜி புத்தகங்களையுமா விட்டுவைப்பான்!? அவனும் புத்தகக் காட்சிக்குச் செல்வான். ஆனால் வெளியிலேயே நின்றுவிடுவான். அங்கு ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் பழைய புத்தகங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் கில்லாடி அவன். அதுதான் அவனுக்கு புத்தகக் காட்சி. புத்தகக் காட்சி என்று மட்டுமில்லை, எங்கு பழைய புத்தகக் கடையைப் பார்த்தாலும் நுழைந்துவிடுவான். எனக்குத் தெரிந்து அவன் எந்தப் புத்தகத்தையும், பாடப் புத்தகங்கள் உட்பட, புத்தம் புதிதாக வாங்கியதில்லை. இதில் அவனுக்கு உள்ளூரப் பெருமையுண்டு. எனக்கு மற்ற விசயத்தில் எப்படியோ ஆனால் புத்தக விசயத்தில் அவனது கொள்கை சற்றும் ஏற்புடையதல்ல. அதுவும் புத்தகக் காட்சிக்கு வந்துவிட்டு பழைய புத்தகங்களை வாங்கிச் செல்வதென்பது ஏளனமான செயலாகவே எனக்கு இதுவரை இருந்து வந்துள்ளது.

அப்படிப்பட்ட நான் இப்போது என் விதிகளைச் சற்று தளர்த்திக்கொண்டேன். காரணம்: கடந்த ஒரு வருடத்தில் நான் மிக அதிகமான பணம் செலவழித்து  புத்தகங்களை வாங்கிவிட்டேன். இரண்டாவது காரணம் நவீனத் தமிழிலக்கியப் புத்தகங்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளிலிருக்காது என்ற எண் எண்ணம். ஆனால் சமீபத்தில் நண்பர் உமாநாத் செல்வன் @ விழியன் அவரது முக நூலில் முதலில் பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்றுவிட்டு பின்னர் புத்தகக் காட்சிக்குச் செல்க என்று எழுதியிருந்தார். மேலும் பாலபாரதியும் நவீன இலக்கியப் புத்தகங்கள் எல்லாம் அங்கு கிடைக்கின்றன என்று என் கேள்விக்கு பதிலிறுத்திருந்தார். எனவே நேற்று அங்கு முதலில் செல்லலாம் என முன்பே தீர்மானித்திருந்தேன். ஆனால் என் ராசி தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு நடைபாதையோரக் கடைகளுக்குச் சென்றால் வியாபாரிகள் தார்பாலின் போட்டு கடைகளை மூட ஆரம்பித்துவிட்டனர். என்னருகில் நின்ற ஒருவர் அப்போதுதான் அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அங்கு வாங்கிமுடித்திருந்தார்.   கட்டுமானமும் குலையாமல் நன்றாகயிருந்தது. எனக்கு வயிற்றெரிச்சாலாகி விட்டது. மழை விடுவதாயில்லை, கைக்குட்டையை குடையாக்கிக் கொண்டு, குளிர் காலத்தில் பெய்யும் மழையை சபித்துக்கொண்டே, புத்தகக் காட்சி நோக்கி நடக்கலானேன்.

அவ்வளவு மழை பெய்தும் மேற்கூரை நன்றாக இருந்ததால் ஒன்றும் பெரிதாக ஒழுகவில்லை.காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் முன்பு புத்தகக் காட்சி நடந்தபோது இதுபோல் ஒரு பனிக்கால மழையில் கடைக்குள்ளும் பெய்த மழையில் புத்தகங்கள் நனைந்துவிடாமல் இருக்க பதிப்பாளர்கள் பட்ட சிரமங்களை நான் ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். நானே ஒரு கடையில் இதற்கு உதவியிருக்கிறேன். புத்தகக் காட்சி என்றால் இம்மாதிரி நினைவுகளே எனக்கு முதலில் மனதிற்குள் வரும். அக்காலங்களில் இவ்வளவு கூட்டமிராது. பொறுமையாக புத்தகங்களைப் படித்துப் பார்த்து வாங்கலாம். கடந்த சில வருடங்களாகத்தான் இவ்வளவு கூட்டம் அம்முகிறது. புத்தக விரும்பியான எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றம்தான்.  ஆனால் அதே சமயம் ஒரு பதிப்பாளருக்கு இது மகிழ்ச்சியான விசயம்.

இந்த வருடத்தில் நேற்று இரண்டாவது முறையாக புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். முதலில் பவானியுடனும், அமுதனுடனும் போனவாரம் சென்றிருந்தேன். அது இரண்டாவது நாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. இந்தமுறை நான் மட்டும் தனியாக பலத்த முன் தயாரிப்புகளோடு சென்றிருந்தேன். முதலில் ஸ்டால் லிஸ்டையும், லே அவுட்டையும் பபாஸி (BAPASI) இணைய தளத்திலிருந்து பெற்று செல்ல வேண்டிய பதிப்பகங்களை  லே அவுட்டில் குறித்துக் கொண்டேன். வாங்க வேண்டிய புத்தகங்களையும் லிஸ்ட் போட்டுக்கொண்டேன். மேலும் பல்கலையிலிருந்து வரும் போதே அமைந்தகரை ஆறுமுக பவனில் பசித் தொல்லையால் புத்தகக் காட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறாமலிருக்கச் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டேன். பின்னே புத்தகக் காட்சி சிற்றுண்டிச் சாலையில் அநியாய விலை என பலரும் புகாரளித்துள்ளனரே!

முதலில் கண்ணில்பட்டது ஐந்திணைப் பதிப்பகம். ஜெயகாந்தன், ஜானகிராமன் புத்தகங்கள் அதிகமும் இருந்தன. ஏசியன் எஷுக்கேசனல் சொசைட்டியின் ’அபிதான சிந்தாமணி’ பதிப்பும் இருந்தது. அது எனது வாங்க வேண்டிய லிஸ்டில் இருந்ததால் புரட்டிப் பார்த்தேன். அட்டை பிரம்மாதமாக இருந்தது. ஆனால் உள்ளே தாளும், எழுத்துருவும் மிக மோசம். விலையும் 645 ரூபாயகள்; ஆனால் அவர்களது இணையதளத்தில் 400 என்று போட்டிருந்தார்கள். உடுமலை. காமில் சீதை பதிப்பக ’அபிதான சிந்தாமணி’ 700 ரூபாய் எனப் போட்டிருந்தது. எனவே அதையும் பார்த்துவிட்டுத் தீர்மானிக்கலாம் என நடையைக் கட்டினேன். வழியில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் நோட்டமிடலாமென நுழைந்தேன். அங்கு என்னுடன் முன்பு பணிபுரிந்த இரு நண்பர்களைப் பார்த்து சிறிது அளாவளாவி விட்டு ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தைத் தேடினேன், அப்போது சீதை பதிப்பகம் கண்ணில்பட்டது. அங்கு பல புத்தகங்கள் ஐம்பது சதவிகித தள்ளூபடியில் போட்டிருந்தார்கள். 700 மதிப்புள்ள ’அபிதான சிந்தாமணி’ ரூபாய். 400 க்கும், 1000 ரூபாய் மதிப்புள்ள ’போரும் அமைதியும்’ 500 ரூபாய்க்கும் இருந்தது. மூளை துருதுருத்தது. போரும் அமைதியும் டி. எஸ். சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்புதானே என பதிப்பகத்தாரிடம் உறுதி செய்து கொண்டேன். அபிதான சிந்தாமணி ஒரளவு நல்ல தாளில், நல்ல எழுத்துரு அளவில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் போரும் அமைதியும் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு டி. எஸ். சொக்கலிங்கம் என்றிருந்தாலும், அதையடுத்த tag line-ல் பதிப்பகத்தாரால் செம்மைப் படுத்தப்பட்டது என்று காணப்பட்ட சொற்கள் சற்று பீதியை வரவழைத்தது. ஆயினும் 500 ரூபாய் தானே பரவாயில்லை வாங்கிப் பார்க்கலாம் என என்னைத் தள்ளியது.

’போரும் அமைதியும்’ நான் பழைய புத்தகக் கடையில்தான் வாங்கவேண்டுமென நினைத்திருந்தேன். மழையினால் புதுப் புத்தகமே 500 ரூபாய்க்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாகயிருந்தது. சீதை பதிப்பகத்தில் சதாசிவ ப் பண்டாரத்தார், மயிலை. வேங்கிடசாமி நாட்டார் புத்தகங்கள் பலவும் 50 சதவீத தள்ளூபடிக்கு வைக்கப்பட்டிருந்தன. வாங்கிய இரண்டு புத்தகங்களுமே அதிக பளுவாகிவிட்டபடியால் இன்னொரு நாள் வாங்கிக் கொள்ளலாமென நினைத்து இதே தள்ளூபடியை உங்கள் பதிப்பகத்திற்கே வந்து வாங்கினால் தருவீர்களா எனக் கேட்டேன். அவர் வருடத்தில் மூன்று நாட்கள், பொங்கல், கருணாநிதி பிறந்த நாள், அவரது அம்மாவின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆகிய தினங்களில், இத்தகைய தள்ளுபடி விலைக்கே புத்தகங்கள் கிடைக்குமெனக் கூறினார்.

பின்னர் அடையாளம் பதிப்பகத்தில் ’டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகம் பார்த்தேன். உடனேயே வாங்கிவிட்டேன். உண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் இப்புத்தகம் குறித்துத் தேடியதில் இப்போது இப்புத்தகம் கிடைப்பதில்லை என அறிந்து வருத்தமுற்றேன். ஆனால் இதன் மின்னூல் இலவசமாக இவ்விணைய தளத்தில் கிடைக்கிறது. ஆயினும் இம்மாதிரிப் புத்தகங்கள் எப்போதும் கைவசமிருப்பது நன்று. இது இவ்வகையில் ஒரு சிறந்த செவ்வியல் புத்தகம். நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது எங்கள் துறை நூலகத்தில் இதன் பல பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். பொதுமக்கள் சுகாதாரத் துறையில் உள்ளோருக்கும்,  பொதுமக்களுக்கும் இது பைபிள் போன்றது. சென்ற வருடம் இப்புத்தகம் கிடைக்காமல் இதே அடையாளம் பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடான ’மோயோ கிளினிக் - உடல்நலக் கையேடு’ புத்தகம் வாங்கினேன். அதைவிட ’டாக்டர் இல்லாத இடத்தில்’ சிறந்த புத்தகம்.

அகரம் பதிப்பகத்தில் ’பொய்த்தேவு’ வாங்கிக்கொண்டேன். ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து விற்று தீர்ந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள். சாகித்ய அகாடமியில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ‘திரு.வி.க’ ’வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார்’ புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அமுதனிடமிருந்து அழைப்பு. என்னை ஏன் பெரிய லைப்ரரிக்குக் கூட்டிச் செல்லவில்லை என ஆதங்கப் பட்டான். வீட்டிற்கு வரும்போது Ben 10 புத்தகமும், Bubbles -ம் (சோப்பு நுரையில் முட்டைவிடும் விளையாட்டுச் சாமான்) வாங்கிவர வேண்டுமென ஆணையிட்டான். அவனிடம் சரி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கிழக்கில் அரவிந்தன் நீலகண்டனின் ’பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிசம்’ வாங்கிவிட்டு தமிழினியை அடைந்தேன். அங்கு வசந்தகுமாருடன், சு.வெங்கடேசனும், கரு. ஆறுமுகத் தமிழனும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனது புத்தக மூட்டையை அங்கு வைத்துவிட்டு அலைகள் பதிப்பகம் தேடிச் சென்றேன். அங்கு நா. வானமாமலையின் மார்க்சியம் குறித்த 5 புத்தகங்கள் மேலும் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ’தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’ புத்தகமும் வாங்கிக் கொண்டேன்.

நேரமாகிக் கொண்டேயிருந்தது, அமுதனுக்கு புத்தகம் வாங்க வேண்டுமே என மனது அடித்துக் கொண்டது. Ben 10 புத்தகம் Scholastic பதிப்பகத்தில் இருப்பதை போனவாரம் வந்தபோதே பார்த்திருந்தோம். ஆனால் என்னால் அதை அவசரத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. 15 நிமிடங்கள் அலைந்தபின் அது தமிழினிக்கு எதிரேலேயே இருப்பதைக் கவனித்தேன். Ben 10  புத்தகம் ஒன்றும், காட்டு யானை படங்கள் கொண்ட புத்தகம் ஒன்றும் வாங்கிக் கொண்டேன். மீண்டும் தமிழினிக்கு வந்தபோது இரவு 9 மணியாகிவிட்டதால் கடைகளை மூடுமாறு விசிலடித்துக் கொண்டேயிருந்தனர். எதிரிலிருந்த காலச் சுவடுவில் ’கலங்கிய நதி’ வாங்கிக் கொண்டேன். தரம்பாலின் ’காந்தியை அறிதல்’ புத்தகம் இருக்கிறதா எனத் தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையாதாலால் சிப்பந்தி ஒருவரிடம் விசாரித்ததில் தீர்ந்து விட்டது எனக் கூறினார்.

வீடு வந்து சேர்ந்தபோது மணி 10.15 ஆகிவிட்டிருந்தது. அமுதன் தூங்கிவிட்டிருந்தான். காலையில் அவன் எழுந்தபோது பவானி அப்பா உனக்காக வாங்கி வந்திருக்கிற புத்தகங்களை பார் எனச் சொல்லியிருக்கிறாள். அவன் வேறு ஒரு புத்தகமும் உன்னை வாங்கிவரச் சொன்னேனே ஏன் வாங்கவில்லை எனக் கேட்டான். எஙகளிருவருக்கும் அவன் சொன்ன அந்தப் புத்தகத்தின் பெயர் விளங்கவில்லை. அடுத்தமுறை வாங்கித் தருகிறோம் எனச் சமாளித்தோம். எனது புத்தகங்களை அமுதன் பார்த்துவிட்டு அப்பா மட்டும் எவ்வளவு புத்தகங்கள் பெரிசு பெரிசாக வாங்கியிருக்கிறான், எனக்கு ரண்டே ரெண்டுதானா?! என பவானியிடம் ஆதங்கப் பட்டுக்கொண்டான். 

வியாழன், 5 ஜனவரி, 2012

காவல் கோட்டம் பாராட்டுவிழா

சென்னையை டிசம்பர் ஜனவரி மாதங்கள் எப்போதுமே புத்தக வெளியீடு சார்ந்த நிகழ்ச்சிகள், பாராட்டு விழாக்கள் நிறைத்திருக்கும். கடந்த இரண்டு நாட்களாக இவற்றில் சிலவற்றில் நான் கலந்துகொண்டேன். முந்தாநாள் தமிழினியின் 6 புத்தகங்கள் வெளியீட்டுவிழாவிலும், நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் ‘உடையும் இந்தியா’ நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். அது போல் நேற்று தமிழினி பதிப்பகத்தின் சார்பில் சாகித்திய அகாடமி பரிசுபெற்ற காவல்கோட்ட நாவலாசிரியர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டேன். இந்த மூன்று நிகழ்வுகளிலும் சு. வெங்கடேசனுக்கு நடந்த பாரட்டுவிழா மிக அருமையாக நடைபெற்றது. அதற்கான காரணம் அழைக்கப்பட்டிருந்த பேச்சாளர்கள்.

நான் இந்த நாவலை கடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கி சென்ற ஜூலை மாதம் கிட்டத்த்ட்ட 10 நாட்கள் கால அளவில் படித்து முடித்தேன். எனக்கு நாவல் பிடித்திருந்தது. இது குறித்த என் கருத்துக்களை பின்னர் எழுதவேண்டும். என்வே பிறர் இந்நாவல் குறித்து என்ன பேசுகிறார்கள் என அறிந்துகொள்ளூம் பொருட்டும் விழாவிற்கு சென்றிருந்தேன். எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் கிட்டத்தட்ட அனைவருமே நாவல் குறித்தே பேசினார்கள். விழாவிற்கு தலைமை ஏற்றவர் ராஜேந்திர சோழன். அவரது உரை அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் அதிகம் அவர் நாவலின் சிறப்பு குறித்து பேசவில்லையென நினக்கிறேன். பின்னர் பேச வந்த ச. தமிழ்ச்செல்வன் தஙக்ளது த.மு.எ. ச சங்க பொதுச் செயலாளரான சு. வெ. அகாடமி பரிசுபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்ற ரீதியில் பேசினார்.

செல்வ புவியரசுவின் பேச்சும் நாவல் குறித்து சிலாகிப்பதாக இருந்தது, ஆயினும் அவரது நம்பிக்கை சார்ந்து நாவலில் வெளிப்படும் சில பகுதிகள், ஆரிய ஆதிக்கம்,  குறித்து மகிழ்வதாகக் கூறினார். பின்னர் பேசவந்த கண்மணி குணசேகரன் தனது வழக்கமான ஸ்டைலில் (பாடலுடன்) பேச்சை ஆரம்பித்தார். தான் இதுவரை இந்நாவலின் 100 பக்கங்களை மட்டுமே படித்துள்ளதாகக் கூறினார். ஆயினும் படித்தவரையில் சு. வெ. வின் எழுத்தாளுமை வியக்க வைப்பதாகக் கூறினார். அவரது பேச்சில் அரங்கில் அடிக்கடி சிரிப்பலைகள் எழுந்தன. சு. வேணுகோபால் பேசும்போது தனக்கும் சு.வெ.விற்கும் உள்ள உறவைக் குறித்து விளக்கிவிட்டு இந்நாவல் குறித்து தனது கருத்துக்களை விளக்கினார். இதுவரை பேசியவர்களில் சு. வேணுகோபாலின் உரையே சிறப்பாக இருந்தது. போரும் அமைதியும் போல தமிழில் நேற்றுவரை ஒரு வகைமை இல்லை. இன்று இந்நாவல் அக்குறையைப் போக்கிவிட்டது என்றார். இது மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதின் மூலம் தமிழனின் 2000 ஆண்டு காலத் தனிமையை விவரிக்கிறது என முத்தய்ப்பாகச் சொன்னார்.

நாஞ்சில் நாடனுக்கு தொண்டை சரியில்லாததால் அவரது உரையை ‘ஆழிசூழ் உலகு’ ஜோ டி குரூஸ் படித்தார். காவல் கோட்டத்துடன் பரிசிற்காக கடைசி வரை போட்டியிட்டது என அரசல் புரசலாகப் பேசப்பட்ட நாவலின் ஆசிரியரே அதற்கு வாழ்த்துரை வழங்க வந்தது நன்றாக இருந்தது. படிக்கப்பட்ட நாஞ்சிலின் உரையில் நாவல் குறித்த விமரிசனமோ வேறு சிலாகிப்போ அதிகம் இல்லை. பெரிதும் விருதும் அது சார்ந்த மன நிலைகளைப் பற்றியுமே இருந்தது என நினைக்கிறேன். கடைசியாக பழ. கருப்பையா பேச வந்தார். உள்ளதிலேயே அவரது உரைதான் மிகச் சிறப்பாக இருந்தது என எண்ணுகிறேன். தனக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்புகளை படிக்கச் சொல்லிக் கொடுத்துவர் தமிழினி வசந்தகுமார் என்றாரம்பித்தார். தனக்கு எல்லா புத்தகஙக்ளையும் படித்து சிறந்தவற்றை அடையாளம் காண்பது நேரமின்மையால் இயலாதென்பதால் வசந்தகுமாரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகச் சொன்னார். இவரும் ஆரிய திராவிட ஒப்பீடுகளை நிகழ்த்தினார் எனினும் காவல்கோட்டம் குறித்த முக்கியமான அவதானிப்புகளைக் குறிப்பிட்டார்.

களவும் காவலும் எப்படி ஒன்றையொன்று பதிலீடு செய்துகொண்டன என நாவல் காட்டும் போக்கிலிருந்து உதாரணங்களை அடுக்கியவர், டாவோயிசத்தில் ஒரு மருத்துவன் பணி செய்யும் பகுதியில் நோய்கள் அதிகம் காணப்படும் எனில் அவன் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும், எம் மருத்துவனின் நிலப் பகுதியில் நோய்கள் இல்லையோ அம்மருத்துவன் கேட்கும் தொகையை பிணியாளன் கொடுக்கவேண்டும் என்றும் உள்ளதாகச் சொன்னார். அதுபோல் நம் கலாச்சாரத்தில் ஒருவன் காவல் புரியும் பகுதியில் களவுபோனல் காவலாளியே இழந்த பொருட்களை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அறம். அதைக் காவல் கோட்டத்தின் மூலம் அறியவந்தது என்றும் சொன்னார். அதற்கு மாறாக நவீன காவல்முறையை ஆங்கில ஆட்சியாளார்கள் புகுத்தியதால் ஏற்பட்ட அவலங்களையும் நாவல் காட்டுவதாகச் சொன்னார். இதனால் யாருக்கும் இன்று பொறுப்புணர்ச்சியில்லை என்றார். உதாரணமாக அக்காலத்தில் குளம் வெட்டுவதும், நீர்ப்பராமரிப்பும் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களின் பொறுப்பாகும், ஆனால் பொதுப் பணித்துறை என்ற மைய நிர்வாக முறை வந்ததும் நம் பராம்பரிய நீராதாரஙகளின் இன்றைய நிலைமையை ஒப்பிட்டார்.

ஆரியத்தை நாம் உள்வாங்கிச் செரித்துக்கொண்டோம், இஸ்லாமியத்தை செரித்துக்கொண்டோம் ஆயினும் நம்மால் ஆங்கிலேயனை செரித்துக் கொள்ள முடியவில்லை. கப்பலேறி அவன் போனபின்பும் இன்னும் அவன் நம்மை ஆட்டிப் படைத்துகொண்டிருக்கிறான் என்றார். இன்று நாம் கொண்டாடும் புத்தாண்டு, பிறந்த நாள் விழாக்கள் நம் கலாச்சாரத்தின் மீதான அவனது ஆதிக்கம் விடைபெறவில்லை என்பதையே காட்டுவதாகச் சொன்னார். இறுதியில் சு. வெங்கடேசன் ஏற்புரை வழங்கவந்தார். அப்போது மிகவும் நேரமாகிவிட்டபடியால் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார். வசந்த குமார் தனது காவல் கோட்ட கையெழுத்துப் பிரதியைப் படித்து முடித்தவுடனேயே சு. வெங்கடேசனின் மதுரையைப் பார்க்க காலை வைகை விரைவு வண்டியில் முன்பதிவு செய்யாத கோச்சில் வந்ததைச் சொன்னார். தனது படைப்பிற்கு தன்னைவிடவும் நேர்மையாக இருக்கும் வசந்தகுமாரை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக எல்லாப் பேச்சாளார்களுமே தமிழினி வசந்தகுமாரைப் பாராட்டினார்கள். அவர் இதற்கு மிகவும் தகுதியானவர்தான். எனக்கும் அவரை நினைத்து பெருமையாக உள்ளது.

வியாழன், 29 டிசம்பர், 2011

மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே...


மாருதி ஆம்னி திருச்சி-சென்னை புறவழிச் சாலையிலிருந்து மேற்கில் பிரியும் சாலையில் காலை ஒன்பது மணியளவில் நுழைந்தது. அச்சாலை காவிரியின் தென்கரையை தொட்டுக்கொண்டு சென்றது. சாலையின் ஓரத்தில் திருச்சி நகர குப்பைகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆம்னி வேன் மேலும் செல்ல செல்ல ஊதா நிற மின்மயானக் கட்டடம் தெரிய ஆரம்பித்தது. எங்கள் வேன் மின்மாயானத்திற்கு வடபுறமுள்ள தகரக் கூரை வேய்ந்த பழைய மயானத்தை அடைந்தது. ஓயாமாரி மயானம் என்பது அதன் பெயர். ஓயாமல் மழை பெய்வதுபோல் அங்கு ஒருகாலத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அப்பெயர் வந்ததாக வெட்டியான் சின்னையா சொன்னார். தென்மேற்கில் மலைக்கோட்டை கம்பீரமாக நின்றிருந்தது. வடக்கில் காவிரி இருகரைகளையும் தொட்டுக்கொண்டு சுழித்துச் சென்றுகொண்டிருந்தது. மயான மரங்களிலிருந்து பறவைகளின் ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது. இதமான மார்கழி மாத பனி. நாங்கள் வருவதற்கு முன்பே வரட்டிகள் அடுக்கப்பட்டு மூன்றடி நீள சிதை தயாராக இருந்தது. பெரிய அத்தானின் நண்பர் ரவீந்திரன் அதிகாலையிலேயே அங்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

சிதையில் கோமதி பாப்பாவின் சடலத்தை சிலர் கிடத்தினர். பாப்பாவின் முகத்தில் அவள் கடந்த 5 வருடங்களாக அனுபவித்த வேதனையின் சுவடுகள் ஏதும் தெரியவில்லை. அன்றலர்ந்த மலர் போலிருந்தாள். முகத்தில் ஒரு சிறிய புன்னகை காணப்பட்டது போல் தோன்றியது. என்னிடம் செல்லையா ஒரு கருவேல முள்ளைக் கொடுத்து பாப்பாவின் காது மடல்களில் துளையிடுவது போல் பாவனை செய்யச் சொன்னார். தாய்மாமனான என்மடியில் வைத்து அவளுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என நாங்கள் நினைத்த போதெல்லாம் அவளுக்கு உடம்பிற்கு முடியாமல் போய்விடும். கோமதி என்னுடன் எசலும் போதெல்லாம் என் தங்கை, “ஏட்டி!, அவம் ஒந் தாய்மாமண்டி, ரொம்ப எசலுனேன்னா அப்புறம் ஒங் காதிற்கு தங்கத்தோடு போடமாட்டான்” எனச் சொல்லுவாள். முள்ளால் காது மடல்களில் துளையிடுவதாக பாவனை செய்யும் இந்தச் சம்பிரதாயத்தை நான் செய்தபோது மனதிற்குள் “”மானூத்து மந்தையிலே மான் குட்டி பெத்த மயிலே, பொட்ட பிள்ள பிறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே... தாய்மாமன் சீர் சுமந்து வாராறாண்டி, அவன் தங்கக் கொலுசுகொண்டு வராண்டி...” என்ற வைரமுத்துவின் பாடலை நான் பாடிக்கொண்டிருந்தேன். இதை சட்டென்று பின்னர் உணர்ந்தேன். அதே கணத்தில் நீண்டநெடிய தமிழ்ப் பண்பாட்டின் மேலும் ஒரு கண்ணிதான் நான் என்பதை இத்தகைய சடங்குகள் எனக்கு உணர்த்துவதை உணரவும் செய்தேன். இந்த எண்ணங்கள் அந்த நேரத்திலும் என்னுள் ஒரு பரவச மனநிலையை ஏற்படுத்தின.

பாப்பாவின் உடம்பை, முகம் தவிர்த்து, வரட்டிகளைக் கொண்டு மூடிவிட்டிருந்தார்கள். சின்னையாவின் உதவியாளர் செல்லையா சிதையை மூடுவதற்கு கொட்டகைக்கு அருகிலேயே களிமண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தார். வாய்க்கரிசி போடுவதற்கு சின்னையா மீண்டும் என்னை முதலில் அழைத்தார். பின்னர் கோமதியின் பெரியப்பாக்கள், தாய்வழித் தாத்தாவான என் அப்பா, மற்ற உறவினர்கள், அத்தானின் நண்பர்கள் என வரிசையாக இட்டபின் கடைசியாக அத்தானை வாய்க்கரிசி இடச் சொன்னார்கள். ஏனைய சடங்குகள் முடிந்தபின் கடைசியாக எல்லோரும் ஒருமுறை முகத்தைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். நான் இறுதியாக ஒருமுறை பாப்பாவின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டேன். பின்னர் முகம் மூடப்பட்டபின், ஒரு சிறிய எருத்துண்டில் நெருப்பைப் பற்றவைத்து அத்தானை அவர் மகளுக்குக் கொள்ளியிடுமாறு சின்னையா பணித்தார். அந்த கணத்தில் கிட்டத்தட்ட அனைவருமே விசும்பினார்கள். என்னுள் உயிருள்ள கோமதியின் நினைவுகள் அலைமோதின. அந்த நினைவுகள் என்னை அழ வைத்தன. பிறருக்கும் அப்படித்தானிருந்திருக்கும். பின்னர் எல்லோரும் காவிரியை நோக்கி நடக்கலானோம். உறவினர் ஒருவர் “கங்கையின் மேலான காவிரி தீர்த்தம், மங்கல நீராட முன்வினை தீரும்” எனப் பாடிக்கொண்டுவந்தார். காவிரியில் கால் வைத்ததும் எனக்கு ஜெயமோகனின் நதி சிறுகதை மனதிற்குள் ஓடியது.  


 

கோமதி என்ற சாய் ஜெய்ஸ்ரீ, என் மகன் அமுதன் பிறந்து கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கழித்து 2007 ஆம் வருடம் ஜனவரி 12 ஆம் நாள் பிறந்தாள். பிறப்பதற்கு முன்பே அவளுக்குச் சில குறைபாடுகள், குறிப்பாக சிறுநீரக அமைப்பின் கீழ்ப்பகுதிகளில், இருக்க வாய்ப்பிருப்பதாக அவளை உண்டாகியிருக்கும்போது என் தங்கைக்குச் செய்யபட்ட மீயொலி பரிசோதனைகள் தெரியப்படுத்தின. ஆனால் பிறந்த உடன் அவள் சிறுநீர் கழித்துவிட்டதால் அவ்வுறுப்புகளில் குறையிருப்பதற்கான வாய்ப்புகளில்லை என்பது தெளிவானது. ஆயினும், அவள் சிறுநீர் கழிப்பதில் அவ்வப்போது சிக்கல்கள் இருந்தன. வளர வளர அது சரியாகும் என குழந்தை சிறுநீரகத்துறை மருத்துவர் சொன்னார். இதற்கிடையில் ஐந்தாவது மாதத்தில் கோமதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். அப்போது அதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் அவளுக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் தமனியின் இரத்த அழுத்தம் இயல்பைவிட மிக அதிகமாக இருப்பதாகவும், அதனால்தான் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டது. ஆயினும் அக்குழு மருத்துவர்களுக்கிடையே அதற்கான தீர்வை அளிப்பதில் ஏற்பட்ட முரண்பாடுகளால் சென்னையில் மருத்துவர் செரியன் நடத்தும் மருத்துவமனையை அணுகச் சொன்னார்கள்.



பின்னர் அங்குதான் இந்நோய் சரிப்படுத்தமுடியாத முதன்மை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம் (Primary Pulmonary Artery Hypertension) எனக்கண்டறியப்பட்டது. இதற்கிடையில் கோமதிக்கு சிலமுறைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவையில் உள்ள கோவை மெடிக்கல் செண்டரிலும், பின்னர் பி. எஸ். ஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். இக்காலங்களில் அவளுக்கு வீட்டிலும் தினமும் பிராணவாயு செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படது. அதனால் வீட்டிலேயே எப்பொதும் ஒரு பிராணவாயு உருளை தயாராக இருக்கும். ஆனால், தேவைப்பட்ட காலங்களில் சட்டென்று அவ்வுருளையை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களினால் போனவருடம்தான் பிராணவாயுவை காற்றிலிருந்து பிரித்துக் கொடுக்கும் உபகரணம் ஒன்றை வாங்கினோம். ஆயினும் அவளுக்கு லேசாக சளி பிடித்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் அனுமதிக்கவேண்டும். இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு மிகவும் குறைந்துவிடும், ஊதா நிறமாகிவிடுவாள். குறைந்தது 10 நாட்கள் ஜீவ மரணப் போராட்டத்திற்குப் பிறகு அவள் பலமுறை அவ்வாறு தப்பிப் பிழைத்துள்ளாள். இந்த 5 வருடங்களில் கடந்த ஒருவருடம் மட்டும்தான் இம்மாதிரி அவளுக்கு ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த வருடத்தில் மட்டும் மூன்றுமுறை கோவை பி.எஸ். ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கடந்த செப்டம்பரிலேயே அவளுக்கு மிகக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படது. அப்போதே இதயமும் மிகவும் பழுதடைந்துவிட்டது. சென்றவாரம் மீண்டும் மூச்சுத்திணறலும், சிறுநீர் சரிவரப் பிரியாததால் உடல்வீக்கமும் ஏற்பட்டு பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4 நாட்கள் கழித்து மருத்துவமனையிலேயே உயிரைவிட்டாள். பின்னர் அங்கிருந்து அத்தானின் சொந்த ஊரான திருச்சிக்குச் சென்று எல்லாச் சடங்குகளையும் முடித்தோம்.



ஆனால் அவளது மூளை மிகுந்த துடிப்பானது. மற்ற அவயங்களில் இருந்த குறைகளை தனது மூளையின் மூலம் அவள் சமனப்படுத்திக் கொண்டாள். உடல்நிலை நன்றாயிருக்கும் காலங்களில் மிகுந்த கிண்டலும், கேலியுமாக இருப்பாள். வாயாடி வள்ளியம்மை, பரட்டை, தொப்புள் குடைஞ்சாள் என பல பெயர்களை நான் அவளுக்குச் சூட்டியிருந்தேன். பல நேரங்களில் யாராவது அவளது பெயரைக் கேட்டால் நான் சூட்டிய பெயர்களில் ஒன்றை வேண்டுமென்றே கிண்டலாகக் கூறுவாள். கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியாது. சென்ற மேமாதம் சென்னையில் என் வீட்டில் ஒருமாதம் வந்து இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக என்னுடன் கோபப்பட்டுக்கொண்டு எனக்கு அத்தைதான் பிடிக்கும் எனச் சொன்னாள். என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்பதற்காக பிற்பாடு நான் எப்போது கேட்டாலும் அவ்வாறே சொல்லுவாள். இறப்பதற்கு இரண்டுநாட்கள் முன்னர் தீவிர சிகிழ்ச்சைப் பிரிவில் இருக்கும்போது கூட உனக்கு மாமாவைப் பிடிக்குமா, அத்தையைப் பிடிக்குமா என நான் கேட்டதற்கு, எனக்கு பவானி அத்தையைத்தான் பிடிக்கும் என ஒரு நக்கல் சிரிப்புடன் சொன்னாள்.

ஒரு குழந்தையைப் பறிகொடுத்துவிடுவோம் என்று தெரிந்துகொண்டே வளர்ப்பது பிறரால் உணர்ந்துகொள்ளமுடியாத அளவிற்கு மன உளைச்சலைக் கொடுப்பது. அதற்கு மிகுந்த மனவலிமையும், பொறுமையும் வேண்டும். என் தங்கை இவ்வகையில் பாராட்டப் படவேண்டியவள். அவளுக்கு இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்க என் வாழ்த்துக்கள்.   

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இன்று மகிழ்ச்சியான நாள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய நாளை மகிழ்ச்சியாக கழித்தேன் என்ற மனநிறைவுடன் தூங்கப்போகிறேன். அதனால்தான் நீண்ட நாட்கள் கழித்து இந்த இடுகை. காரணம், என் மனதிற்குப் பிடித்த இரண்டு விசயங்கள் இன்று நடந்தேறின.

முதாலாவது, என் நெருங்கிய நண்பர்கள் நடத்திய சித்த மருத்துவப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டது.  சித்த மருத்துவத்தின்பால் உண்மையான ஈடுபாடுகொண்ட என் நண்பர்கள் சிலர் சேர்ந்து தரு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பயிலரங்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அப் பயிலரங்கங்களிற்கு துளிர் என்று பெயர் சூட்டியுள்ளனர். பொதுவாகவே இந்திய மருத்துவ முறைகளைக் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் மருத்துவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு உண்டு. இதற்கான காரணங்கள் பலவுண்டு. இவற்றைக் களையும்பொருட்டு இப்பயிலரஙக்ளை தொடர்ச்சியாக நடத்த நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று நடந்தது இரண்டாவது துளிர் நிகழ்வு. இப்பயிலரங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்று இன்று வெற்றிகரமாக சித்த மருத்துவம் மட்டும் செய்து நல்ல நிலையில் உள்ள சித்தமருத்துவ்ர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இன்றைய நிகழ்வில் தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயர் மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவர், வைத்தியர். மகாதேவன் அவர்களும், என் நண்பர். மரு. ஸ்ரீராம் அவர்களும் தங்களது அனுபவஙகளைப் ப்கிர்ந்துகொண்டனர். மகாதேவனை சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சந்தித்து பேசியிருக்கிறேன். இந்திய மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயூர்வேதத்தில் அபாரமான திறைமையும், ஈடுபாடும் உள்ளவர். பரம்பரை வைத்திய ஞானம் அவரது மிகப்பெரிய பலம். இந்த ஆறு வருடங்களில் அவரது ஆற்றல் பல்மடங்கு பெருகியிருப்பதை உணர்ந்தேன். தொடச்சியாக பலமணி நேரம் உரையாற்றினார். சில சமயங்களில் வாரியார் சுவாமிகள் கதாகாலாட்சேபம் மாதிரி இருந்தது. நண்பர்கள் பலரை நீண்டவருடங்கள் கழித்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டாவது விசயம் - சென்னை வந்த அன்னா ஹசாரேவை பார்த்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் ஹசாரே மாலையில் பேசினார். ஒரு எளிய மனிதரைப் பார்க்க பிரம்மாண்டமாக திரண்டிருந்த  மக்கள் திரள் மிக நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் அங்கு செல்லும்போது மாலை 5.30 ஆகிவிட்டிருந்தது. கல்லூரிக்குள் நுழையும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை ஹசாரே பேசி முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டாரோ என்ற சந்தேகத்துடனே உள் நுழைதேன். நல்ல வேளை அப்படியில்லை. மாலை 6.40 வரை கூட்டம் நடந்தது. ஹசாரே பேச்சை முன்னாள் நடிகர் கிட்டி மொழிபெயர்த்தார். பின்னர் கேள்விகளுக்கு ஹசாரேயும், கிரன் பேடியும் பதிலளித்தார்கள்.

பல்வேறு வகையான மக்களும் கலந்து காணப்பட்டனர். ஆயினும் கூட்டத்தில் மிக அதிகளவில் வடஇந்தியர்கள் காணப்பட்டனர். பெரும்பாலான தமிழர்களுக்கு இன்னும் ஹசாரே மேல் ஈர்ப்பு வரவில்லைபோல. கூட்டம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தன்னார்வத் தொண்டர்களால் நல்லமுறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்து ஹசாரே கிளம்பும்போது அவரை அருகில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது நானும் காந்தியைப் பார்த்துவிட்டேன் என்று முன்னர் நம் பாட்டையாக்கள் சொல்லி மகிழ்ந்த தருணங்களை நானும் உணர்ந்தது போன்ற பரவசம் ஏற்பட்டது.

கூட்டம் முடிந்து திரும்புகையில் ஜெயமோகனின் அன்னா ஹசாரே புத்தகம் கிழ்க்கு பதிப்பகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சுமாராக 200 புத்தகங்கள் இனறைய கூட்டத்தில் விற்றதாக மகிழ்ச்சியுடன் அங்கிருந்தவர் சொன்னார். நான் இன்று கோவை விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கவேண்டும். ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால், என் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்குக் கிடைக்காத பாக்கியம் எனக்கு இன்று கிடைத்ததில் ஒரு சந்தோஷம்.

வெள்ளி, 27 மே, 2011

கொல்கத்தா, சிக்கிம்

கடந்த 13 ம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி கொல்கத்தா வழியாக சிக்கிம், பூட்டான் செல்வதாக ஏற்பாடு. மதியம் வீட்டிலிருந்து கைபேசி அழைப்பு. அமுதன் மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்து நெற்றியில் பலத்த அடி என்று தங்கை சொன்னாள். வீட்டிற்குச் சென்று அவனையும், துணைக்கு மாமியாரையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை சென்று புருவத்திற்கு மேல் எற்பட்டிருந்த வெட்டுக்காயத்திற்கு நான்கு தையல்கள் போட்டுவிட்டு கிளம்பும்போது மனைவியும் வந்துவிட்டிருந்தார். பின்னர் மீண்டும் அலுவலகம் வந்து மாலை வீடு திரும்பி விமான நிலையத்திற்கு கிளம்பும் போது மணி 4.30 ஆகி விட்டிருந்தது. மனைவி என்னை வண்டியில் வந்து விமான நிலையத்தில் வந்து விட்டுவிடுவதாக சொல்லியிருந்ததால் சற்று ஆறுதல். Å¢Á¡É ¿¢¨ÄÂõ ¦ºýÚ §º÷žüÌû ¦ƒÂ§Á¡¸Ûõ, «Ãí¸º¡Á¢Ôõ ¦¾¡¼÷óÐ ¨¸ô§Àº¢Â¢ø «¨Æò¾¡÷¸û. நான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததால் மனைவியிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டேன். ¿¡ý «íÌ ¦ºýÚ §º÷ó¾§À¡Ð «¨ÉÅÕõ Å¢Á¡Éõ ²È ¬Ôò¾Á¡¸¢Â¢Õó¾¡÷¸û.

¦¸¡ø¸ò¾¡Å¢ø ¿¡í¸û ¾í¸Å¢Õó¾ §†¡ð¼ÖìÌî ¦ºøÄ ¼¡ìº¢ ¸¢¨¼ì¸ §¿ÃÁ¡ÉÐ. Áõ¾¡Å¢ý ¦ÅüÈ¢ ¸¡Ã½Á¡¸ ʨÃÅ÷¸û Àóò ±ýÚ Â¡§Ã¡ ¦º¡ýÉ¡÷¸û. þÃ×½× ¿¡í¸û¾í¸¢Â¢Õó¾ †×á º¢Åõ §†¡ð¼Ä¢ø. þÃ׽ŢüÌ þùÅÇ× ¦ºÄ× ¦ºö¾¡ø §À¡ñÊ¡¸¢Å¢Î§Å¡õ ±ýÀ¾¡ø ÁÚ¿¡û ¸¡¨ÄÔ½× †×áŢý º¡ì¸¨¼ò ¦¾Õ§Å¡Ã ¸¨¼Â¢ø ¸î§º¡Ã¢Ôõ, ÃºÌøÄ¡×õ. ¿ýÈ¡¸§Å¢Õó¾Ð; À½Óõ ÀòÐ Á¼íÌ ¸õÁ¢. ¦ºý¨É¢¦ÄýÈ¡ø þõÁ¡¾¢Ã¢ì ¸¨¼¸Ç¢ø º¡ôÀ¢ÎŨ¾ «Ú¦ÅÚô§Àý. ÍüÚÄ¡ ÁÉ¿¢¨Ä «ó¿¢¨Éô¨À§Â þøÄ¡Áġ츢ÂÐ. ¸¨¼ìÌ ±¾¢§Ã ÁÃò¾Ê¢ø ´ÕÅÕìÌ Ó¸îºÅÃõ ¿¼óЦ¸¡ñÊÕó¾Ð. ¾Á¢ú¿¡ðÊý ¸¢Ã¡Áí¸Ç¢ø ܼ þô§À¡Ð þ측𺢨Âì ¸¡½ÓÊ¡Ð. À¢ýÉ÷ þÃñÎ ¼¡ìº¢¸û À¢ÊòÐ §Àæ÷ Á¼õ, ¾ðº¢§½ŠÅÃõ ¦ºý§È¡õ. ஹூக்ளி நதியில் நீராடினோம். ¦¸¡ø¸ò¾¡Å¢ø ¦Å¢Öõ, Å¢Â÷¨ÅÔõ ¦ºý¨É¨Â Å¢¼ «¾¢¸Á¡¸¢Â¢Õó¾Ð. 1994 ல் ¸øæÃ¢Â¢Ä¢ÕóÐ «¸¢Ä þó¾¢Â ÍüÚÄ¡ ¦ºýȧÀ¡Ð ´ÕÓ¨È ¦¸¡ø¸ò¾¡ Åó¾¢Õ츢§Èý. அப்போது பார்த்த அதே கொல்கத்தா, பெரிய மாற்றமில்லை. «Øì¸¡É º¢¾¢ÄÁ¼ó¾ ¸ðʼí¸û.

மாலையில் எஸ்பளனேடு பஸ் நிலையத்திலிலிருந்து சில பல குழப்பங்களுக்குப் பின் சிலிகுரி செல்லும் பேருந்தில் ஏறினோம். கொல்கத்தா அனுபவங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பெளதீகமாக உணர்த்திÉ. சிலிகுரியில் அரங்கசாமியின் நண்பரின் நண்பர் திருவாளர் ஜாய் வந்திருந்தார். அவரது உதவியால் ஒரு டாட்டா சுமோவில் சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கிற்கு பயணமானோம். ¦ºøÖõ ÅÆ¢¦ÂíÌõ §¾Â¢¨Äò§¾¡ð¼í¸û. ºÁ¦ÅǢ¢ø §¾Â¢¨Äò §¾¡ð¼í¸¨Ç «ô§À¡Ð¾¡ý À¡÷ò§¾¡õ. ¸¡í¼¡ì¸¢ø §Áñ¼Ã£ý ¦Ãº¢¦¼ýº¢ ±ýÈ Å¢Î¾¢Â¢ø ¿¡í¸û ¾í¸ ²üÀ¡¼¡¸¢Â¢Õó¾Ð. «¨ÈìÌ ãýÚ §À÷ ±ýÈ Å¢¸¢¾ò¾¢ø ãýÚ «¨È¸¨Ç ±ÎòÐ즸¡ñ§¼¡õ. ¸¡í¼¡ì¸¢ø «ôÀÊ ´ýÚõ §Á¡ºÁ¡É ÌǢâø¨Ä. ÌÇ¢òÐ, º¡ôÀ¢ðÎ º¢Ä Á½¢òÐÇ¢¸û µö× ±ÎòÐÅ¢ðÎ ¸¡í¼¡ì¨¸ ÍõÁ¡ ´Õ ÍüÚ ÍüÈ¢ ÅÃÄ¡õ ±Éì ¸¢ÇõÀ¢§É¡õ. Ţξ¢Â¢Ä¢ÕóÐ ºüÚ ¦¾¡¨ÄÅ¢ÖûÇ Á¸¡òÁ¡ ¸¡ó¾¢ Á¡÷ì ±ýÈ þ¼ò¾¢üÌ ¦ºýÚ ÅÃÄ¡õ ±É Ţξ¢ §ÁÄ¡Ç÷ ¦º¡ýÉ¡÷. «¾üÌ ÅñÊ À¢ÊòÐò ¾Õ¸¢§Èý §À÷ÅÆ¢ ±ýÚ §¿Ãò¨¾ì ¸¼ò¾¢É¡÷. ¿¼ì¸ ÓÊ¡Р±ýÚ ¦º¡ýɾ¡ø Åñʸû ÅÕõŨà ¸¡ò¾¢Õ󧾡õ. «¾üÌû þÕð¼ ¬ÃõÀ¢òÐÅ¢ð¼Ð. சிக்கிம் ºð¼º¨À ÅÇ¡¸õ «Õ§¸ Ũà ÅñÊ¢ø ¦ºýÚ, º¢È¢Ð ¯Ä¡Å¢Å¢ðÎ ¿¼ó§¾ விடுதிக்குத் ¾¢ÕõÀ¢§É¡õ. ÅÕõÅÆ¢Â¢ø ´Õ ÌÕòšáŢø ѨÆóÐ Å½í¸¢§É¡õ. Ţξ¢Â¢ø ¾Á¢Æ÷ ÌÎõÀõ ´ý¨È ºó¾¢ò§¾¡õ. ¯ñ¨Á¢ø ¿¡í¸û ¦ºýÈ ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ ´Õ ¾Á¢Æ¨Ãî ºó¾¢ò§¾¡õ. ¾Á¢ÆÛìÌ ÍüÚøÄ¡Å¢ø Å¢ÕôÀÁ¢ø¨Ä ±ýÈ ±ñ½õ ¾ÅÚ ±ýÚ ¯½÷ó§¾ý.

ãýÈ¡õ ¿¡û ¸¡¨Ä 6 Á½¢ìÌ ¸¢ÇõÀ¢ Ôõ¾¡í ÀûÇò¾¡ìÌ ¦ºøÅ¾¡¸ ²üÀ¡Î. ¸¡í¼¡ì¸¢ø ÁÉ¢¾÷¸û §Å¨Ä ¦ºöÔõ §Å¸ò¨¾ À¡÷òÐ ¿¢îºÂÁ¡¸ ¿õÁ¡ø ¬Ú Á½¢ìÌ ¸¢ÇõÀ ÓÊ¡Р±É ¿¢¨Éò§¾¡õ. ¬É¡ø ¬îºÃ¢ÂÁ¡¸ ±í¸¨Ç ²üÈ¢î ¦ºøÄ ¦º¡ÌÍ ÅñÊ ÅóÐÅ¢ðÊÕó¾Ð. µðο÷ ÝÈ «üÒ¾Á¡É ¿À÷.
மேலும்...